Skip to main content

ٱلَّذِينَ
எவர்கள்
كَانَتْ
இருந்தன
أَعْيُنُهُمْ
அவர்களுடைய கண்கள்
فِى غِطَآءٍ
திரைக்குள்
عَن ذِكْرِى
என் நல்லுப தேசங்களை விட்டு
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
لَا يَسْتَطِيعُونَ
இயலாதவர்களாக
سَمْعًا
செவியுற

Allazeena kaanat a'yunuhum fee ghitaaa'in 'an zikree wa kaanoo la yastatee'oona sam'aa

(அவர்கள் எத்தகையவரென்றால் நம்முடைய) நல்லுபதேசங்களைப் பார்க்காது அவர்களுடைய கண்களுக்குத் திரையிடப்பட்டுவிட்டன; ஆகவே, அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற சக்தியற்று விட்டனர்.

Tafseer

أَفَحَسِبَ
எண்ணினார்களா?
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
أَن يَتَّخِذُوا۟
அவர்கள் எடுத்துக்கொள்ள
عِبَادِى
என் அடியார்களை
مِن دُونِىٓ
என்னையன்றி
أَوْلِيَآءَۚ
பாதுகாவலர்களாக
إِنَّآ
நிச்சயமாக நாம்
أَعْتَدْنَا
தயார்படுத்தினோம்
جَهَنَّمَ
நரகத்தை
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கு
نُزُلًا
தங்குமிடங்களாக

Afahasibal lazeena kafarooo any yattakhizoo 'ibaadee min dooneee awliyaaa'; innaaa a'tadnaa jahannama lilkaafi reena nuzulaa

இந்நிராகரிப்பவர்கள் நம்மை விட்டுவிட்டு நம்முடைய அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நிச்சயமாக இந்நிராகரிப்பவர்களுக்கு விருந்தளிப்பதற்காக நரகத்தையேதயார்படுத்தி வைத்திருக்கிறோம்.

Tafseer

قُلْ
கூறுவீராக
هَلْ نُنَبِّئُكُم
நாம்/ அறிவிக்கவா?/உங்களுக்கு
بِٱلْأَخْسَرِينَ
மிகப் பெரிய நஷ்டவாளிகளை
أَعْمَٰلًا
செயல்களால்

Qul hal nunabbi'ukum bilakhsareena a'maalaa

"(பாவமான) காரியத்தில் இவர்களைவிட நஷ்ட மடைந்தவர்களை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று நீங்கள் கேளுங்கள்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
ضَلَّ
வழிகெட்டது
سَعْيُهُمْ
தங்கள் முயற்சிகள்
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
ٱلدُّنْيَا
உலகம்
وَهُمْ
அவர்களோ
يَحْسَبُونَ
எண்ணுகிறார்கள்
أَنَّهُمْ
நிச்சயமாக தாங்கள்
يُحْسِنُونَ
நல்லதை செய்கிறார்கள்
صُنْعًا
செயலை

Allazeena dalla sa'yuhum fil hayaatid dunyaa wa hum yahsaboona annahum yuhsinoona sun'aa

அவர்கள் (யாரென்றால்) இவ்வுலகில் தவறான வழியிலேயே முயற்சி செய்துகொண்டு, தாங்கள் மெய்யாகவே நல்ல காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
ٱلَّذِينَ
இவர்கள்தான்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
وَلِقَآئِهِۦ
இன்னும் அவனுடைய சந்திப்பை
فَحَبِطَتْ
இன்னும் அழிந்தன
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய செயல்கள்
فَلَا نُقِيمُ
ஆகவேநிறுத்தமாட்டோம்
لَهُمْ
அவர்களுக்காக
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
وَزْنًا
எடைக் கோலை

Ulaaa'ikal lazeena kafaroo bi aayaati Rabbihim wa liqaaa'ihee fahabitat a'maaluhum falaa nuqeemu lahum Yawmal Qiyaamati waznaa

இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனைச் சந்திப்போம் என்பதையும் நிராகரித்து விட்டவர்கள். அவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. (நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்தமாட்டோம்.

Tafseer

ذَٰلِكَ
அது
جَزَآؤُهُمْ
அவர்களுடைய கூலி
جَهَنَّمُ بِمَا
நரகம்/அவர்கள் நிராகரித்த காரணத்தால்
وَٱتَّخَذُوٓا۟
இன்னும் எடுத்துக்கொண்டனர்
ءَايَٰتِى
நம் வசனங்களை
وَرُسُلِى
இன்னும் நம் தூதர்களை
هُزُوًا
பரிகாசமாக

Zaalika jazaaa'uhum jahannamu bimaa kafaroo wattakhazooo Aayaatee wa Rusulee huzuwaa

அவர்கள் நம்முடைய வசனங்களையும், நம்முடைய தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக நரகமே அவர்களுக்குக் கூலியாகும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
كَانَتْ
இருக்கும்
لَهُمْ
அவர்களுக்கு
جَنَّٰتُ
சொர்க்கங்கள்
ٱلْفِرْدَوْسِ
ஃபிர்தவ்ஸ்
نُزُلًا
தங்குமிடங்களாக

Innal lazeena aamanoo wa 'amilus saalihaati kaanat lahum Jannaatul Firdawsi nuzulaa

எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்கள் "ஃபிர்தவ்ஸ்" என்னும் சுவனபதிகளில் விருந்தாளிகளாகத் தங்குவார்கள்.

Tafseer

خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
فِيهَا
அதில்
لَا يَبْغُونَ
விரும்ப மாட்டார்கள்
عَنْهَا حِوَلًا
அதிலிருந்து/மாறுவதை

Khaalideena feeha la yabghoona 'anhaa hiwalaa

அதில், அவர்கள் என்றென்றும் நிலைத்து விடுவார்கள். அதிலிருந்து வெளிப்பட அவர்கள் விரும்பவே மாட்டார்கள்.

Tafseer

قُل
கூறுவீராக
لَّوْ كَانَ
மாறினால்
ٱلْبَحْرُ
கடல்
مِدَادًا
மையாக
لِّكَلِمَٰتِ
வாக்கியங்களுக்கு
رَبِّى
என் இறைவனின்
لَنَفِدَ
நிச்சயமாக தீர்ந்துவிடும்
ٱلْبَحْرُ
கடல்
قَبْلَ
முன்னதாகவே
أَن تَنفَدَ
தீர்ந்துவிடுவதற்கு
كَلِمَٰتُ
வாக்கியங்கள்
رَبِّى
என் இறைவனின்
وَلَوْ جِئْنَا
நாம் வந்தாலும்
بِمِثْلِهِۦ
அது போன்றதைக் கொண்டு
مَدَدًا
அதிகமாக

Qul law kaanal bahru midaadal lik Kalimaati Rabbee lanafidal bahru qabla an tanfada Kalimaatu Rabbee wa law ji'naa bimislihee madadaa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் மை அனைத்தும் செலவாகிவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்டபோதிலும் கூட!

Tafseer

قُلْ
கூறுவீராக
إِنَّمَآ أَنَا۠
நானெல்லாம்
بَشَرٌ
ஒரு மனிதன்தான்
مِّثْلُكُمْ
உங்களைப் போன்ற
يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுகிறது
إِلَىَّ
எனக்கு
أَنَّمَآ
எல்லாம்
إِلَٰهُكُمْ
உங்கள் கடவுள்
إِلَٰهٌ
கடவுள்
وَٰحِدٌۖ
ஒரே ஒரு
فَمَن
ஆகவே, எவர்
كَانَ
இருக்கிறார்
يَرْجُوا۟
ஆதரவு வைப்பார்
لِقَآءَ
சந்திப்பை
رَبِّهِۦ
தன் இறைவனின்
فَلْيَعْمَلْ
அவர் செய்யட்டும்
عَمَلًا
செயலை
صَٰلِحًا
நல்லது
وَلَا يُشْرِكْ
இன்னும் இணையாக்க வேண்டாம்
بِعِبَادَةِ
வணங்குவதில்
رَبِّهِۦٓ
தன் இறைவனை
أَحَدًۢا
ஒருவரை

Qul innamaaa ana basharum mislukum yoohaaa ilaiya annamaa ilaahukum Ilaahunw Waahid; faman kaana yarjoo liqaaa'a Rabbihee falya'mal 'amalan saalihanw wa laa yushrik bi'ibaadati Rabbiheee ahadaa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!"

Tafseer