aw khalqam mimmaa yakburu fee sudoorikum; fasa yaqooloona mai yu'eedunaa qulil lazee fatarakum awwala marrah; fasa yunghidoona ilaika ru'oosahum wa yaqooloona mataa huwa qul 'asaaa any yakoona qareeba
அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாகவாகிலும் ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் "எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?" என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)" என்று கூறுங்கள். அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து "அந்நாள் எப்பொழுது (வரும்)?" என்று கேட்பார்கள். அதற்கு நீங்கள் (அவர்களை நோக்கி "அது தூரத்தில் இல்லை) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்" என்று கூறுங்கள்.
Yawma yad'ookum fatastajeeboona bihamdihee wa tazunnoona il labistum illaa qaleela
(இன்றைய தினம் நீங்கள் இறைவனை வெறுத்தபோதிலும் அவன்) உங்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் நீங்கள் அவனைப் புகழ்ந்துகொண்டே அவனிடம் வருவீர்கள். (இறந்த பின்) வெகு சொற்ப (நேர)மே அன்றி தங்கியிருக்கவில்லை என்றும் (அன்றைய தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்!
Wa qul li'ibaadee yaqoolul latee hiya ahsan; innash shaitaana yanzaghu bainahum; innash shaitaana kaana lil insaani 'aduwwam mubeenaa
(நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என்னுடைய அடியார்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.)
Rabbukum a'lamu bikum iny yashaaa yarhamkum aw iny yashaa yu'azzibkum; wa maaa arsalnaaka 'alaihim wakeelaa
(மனிதர்களே!) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள் புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே!) உங்களை அவர்களுக்குப் பொறுப்பாளியாக நாம் அனுப்பவில்லை.
Wa Rabbuka a'lamu biman fis samaawaati wal lard; wa laqad faddalnaa ba'dan Nabiyyeena 'alaa ba'dinw wa aatainaaa Daawooda Zabooraa
வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கின்றது என்பதையும் உங்கள் இறைவன் நன்கறிவான். (நபியே! உங்களது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு "ஜபூர்" என்னும் வேதத்தைக் கொடுத்தோம்.
Qulid 'ul lazeena za'amtum min doonihee falaa yamlikoona kashfad durri'ankum wa laa tahweelaa
(நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவைகளை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறழைத்தால்) அவை உங்களுடைய யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதனைத்) தட்டிவிடவோ சக்தியற்றவை (என்பதை) அறிந்து கொள்வீர்கள்.
Ulaaa'ikal lazeena yad'oona yabtaghoona ilaa Rabbihimul waseelata ayyuhum aqrabu wa yarjoona rahmatahoo wa yakhaafoona 'azaabah; inna 'azaaba rabbika kaana mahzooraa
இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கின்றார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்க மானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக் கொண்டும், அவனுடைய அருளையே எதிர் பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கின்றார்கள். ஏனென்றால், நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக் கூடியதே!
Wa im min qaryatin illaa Nahnu muhlikoohaa qabla Yawmil Qiyaamati aw mu'az ziboohaa 'azaaban shadeedaa; kaana zaalika fil Kitaabi mastooraa
(அநியாயக்காரர்கள் வசிக்கும்) எந்த ஊரையும் மறுமை நாள் வருவதற்கு முன்னதாக நாம் அழித்துவிடாமல் அல்லது கடினமான வேதனை செய்யாமல் விடுவதில்லை. இவ்வாறே (நம்மிடமுள்ள நிகழ்ச்சிக் குறிப்பாகிய) "லவ்ஹுல் மஹ்ஃபூளி"ல் வரையப்பட்டுவிட்டது.
Wa maa mana'anaaa an nursila bil aayaati illaaa an kazzaba bihal awwaloon; wa aatainaa Samoodan naaqata mubsiratan fazalamoo bihaa; wa maa nursilu bil aayaati illaa takhweefaa
(நாம் அனுப்பிய அத்தாட்சிகளை) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (அவர்கள் விரும்பியவாறு நாம் கொடுத்த அத்தாட்சிகளையும் அவர்களே) பொய்யாக்கி விட்டனர் என்ற காரணத்தைத் தவிர, (இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்பி வைக்க வேறொன்றும் தடையாக இல்லை. (இதற்கு முன்னர்) "ஸமூது" என்னும் மக்களுக்கு (அவர்கள் விரும்பியவாறே) ஒரு பெண் ஒட்டகத்தை அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம். அவர்களோ வரம்பு மீறி அதற்குத் தீங்கிழைத்து விட்டனர். (அவர்கள் விரும்புகின்ற) இத்தகைய அத்தாட்சிகளையெல்லாம் (அவர்களுக்குப்) பயமுறுத்தும் பொருட்டேயன்றி நாம் அனுப்புவதில்லை.
Wa iz qulnaa laka inna rabbaka ahaata binnaas; wa maa ja'alnar ru'yal lateee arainaaka illaa fitnatal linnaasi washshajaratal mal'oonata fil quraan; wa nukhaw wifuhum famaa yazeeduhum illa tughyaanan kabeeraa
(நபியே!) "உங்கள் இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்து கொண்டான். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்க முடியாது)" என்று நாம் உங்களுக்குக் கூறியதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். உங்களுக்கு நாம் (மிஃராஜில்) காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காக வேயன்றி வேறில்லை. (நபியே! நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களுக்குப் பயமுறுத்துவது பின்னும் (பின்னும்) அவர்களுடைய பெரும் அட்டூழியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.