Unzur kaifa faddalnaa ba'dahum 'alaa ba'd; wa lal Aakhiratu akbaru darajaatinw wa akbaru tafdeelaa
(நபியே!) சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை, நீங்கள் கவனித்துப் பாருங்கள்! மறுமை (வாழ்க்கை)யோ பதவிகளாலும் எவ்வளவோ பெரிது; சிறப்பிப்பதாலும் எவ்வளவோ பெரிது.
Laa taj'al ma'al laahi ilaahan aakhara fataq'uda mazoomam makhzoolaa
(நபியே!) அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற் குரியவனாக ஆக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் உதவியற்றவராகவும் அமர்ந்து விடுவீர்கள்.
Wa qadaa Rabbuka allaa ta'budooo illaaa iyyaahu wa bilwaalidaini ihsaanaa; immaa yablughanna 'indakal kibara ahaduhumaaa aw kilaahumaa falaa taqul lahumaaa uffinw wa laa tanharhumaa wa qullahumaa qawlan kareemaa
(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டி ருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளை யிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.
Wakhfid lahumaa janaahaz zulli minar rahmati wa qur Rabbir hamhumaa kamaa rabbayaanee sagheera
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்!
Rabbukum a'lamu bimaa fee nufoosikum; in takoonoo saaliheena fa innahoo kaana lil awwaabeena Ghafoooraa
உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் மிக்க நன்கறிவான். நீங்கள் நன்னடத்தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கின்றான்.
Wa aati zal qurbaa haqqahoo walmiskeena wabnas sabeeli wa laa tubazzir tabzeeraa
உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர் களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்.
Innal mubazzireena kaanoo ikhwaanash shayaateeni wa kaanash shaytaanu li Rabbihee kafooraa
ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவன்.
Wa immaa turidanna 'anhumub tighaaa'a rahmatim mir rabbika tarjoohaa faqul lahum qawlam maisooraa
(நபியே! உங்களிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீங்கள் உங்கள் இறைவனின் அருளை எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உங்களிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீங்கள் புறக்கணிக்கும்படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்கள்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுங்கள்.
Wa laa taj'al yadaka maghloolatan il 'unuqika wa laa tabsut haa kullal basti fataq'uda maloomam mahsooraa
(உங்களுடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உங்களுடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! அன்றி, (உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உங்களுடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்கள்! அதனால் நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர்கள்.
Inna Rabbaka yabsuturrizqa limai yashaaa'u wa yaqdir; innahoo kaana bi'ibaadihee Khabeeram Baseera
நிச்சயமாக உங்கள் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்தும்) அளவாகவும் கொடுக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், செயலை உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்கும் தக்கவாறு கொடுக்கிறான்.)