Skip to main content
bismillah

أَتَىٰٓ
வந்தது (வந்தே தீரும்)
أَمْرُ
கட்டளை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
فَلَا تَسْتَعْجِلُوهُۚ
அவசரமாக தேடாதீர்கள்/அதை
سُبْحَٰنَهُۥ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
وَتَعَٰلَىٰ
இன்னும் முற்றிலும் உயர்ந்தவன்
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பதை விட்டு

Ataaa amrullaahi falaa tasta'jilooh; Subhaanahoo wa Ta'aalaa 'ammaa yushrikoon

(இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது! அதைப் பற்றி நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட மிக்க மேலானவன்.

Tafseer

يُنَزِّلُ
இறக்குகிறான்
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
بِٱلرُّوحِ
உயிருடன்
مِنْ أَمْرِهِۦ
தன் கட்டளைப்படி
عَلَىٰ
மீது
مَن
எவர்
يَشَآءُ
நாடுகின்றான்
مِنْ عِبَادِهِۦٓ
தன் அடியார்களில்
أَنْ أَنذِرُوٓا۟
என்று/எச்சரியுங்கள்
أَنَّهُۥ
நிச்சயமாக செய்தி
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّآ
தவிர
أَنَا۠
என்னை
فَٱتَّقُونِ
ஆகவே, அஞ்சுங்கள்

Yunazzilul malaaa 'ikata birroohi min amrihee 'alaa mai yashaaa'u min 'ibaadiheee an anzirooo annahoo laaa ilaaha illaaa ana fattaqoon

அவன் மலக்குகளுக்கு வஹீ கொடுத்து, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் அனுப்பி வைத்து "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறெவனுமில்லை; நீங்கள் எனக்கே பயப்படுங்கள்" என்று எச்சரிக்கை செய்யுமாறு அவருக்குக் கட்டளையிட்டான்.

Tafseer

خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
بِٱلْحَقِّۚ
உண்மையான நோக்கத்திற்கே
تَعَٰلَىٰ
முற்றிலும் உயர்ந்தவன்
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பதை விட்டு

Khalaqas samaawaati wal arda bilhaqq; Ta'aalaa 'ammaa yushrikoon

வானங்களையும் பூமியையும் தக்க காரணத்தின் மீதே அவன் படைத்திருக்கின்றான்; அவர்கள் இணை வைப்பவைகளை விட அவன் மிக்க மேலானவன்.

Tafseer

خَلَقَ
படைத்தான்
ٱلْإِنسَٰنَ
மனிதனை
مِن
இருந்து
نُّطْفَةٍ
இந்திரியம்
فَإِذَا هُوَ
அவனோ
خَصِيمٌ
வாதி, எதிரி
مُّبِينٌ
பகிரங்கமான

Khalaqal insaana min nutfatin fa izaa huwa khaseemum mubeen

அவனே ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டு மனிதனைப் படைக்கிறான்; அவ்வாறிருந்தும் அவன் (இறைவனுடன்) பகிரங்கமான எதிரியாய் இருக்கிறான்.

Tafseer

وَٱلْأَنْعَٰمَ
இன்னும் கால்நடைகளை
خَلَقَهَاۗ
படைத்தான்/அவற்றை
لَكُمْ
உங்களுக்காக
فِيهَا
அவற்றில்
دِفْءٌ
ஆடை
وَمَنَٰفِعُ
இன்னும் பலன்கள்
وَمِنْهَا
இன்னும் அவற்றிலிருந்து
تَأْكُلُونَ
புசிக்கின்றீர்கள்

Wal an 'amaa khalaqahaa; lakum feehaa dif'unw wa manaafi'u wa minhaa taakuloon

(மனிதர்களே!) கால்நடைகளையும் உங்களுக்காக அவனே படைத்திருக்கிறான். அவற்றில் (குளிரைத் தடுக்கும்) பொருள்களும் பல பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் புசிக்கிறீர்கள்.

Tafseer

وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
فِيهَا
அவற்றில்
جَمَالٌ
அழகு
حِينَ
நேரத்தில்
تُرِيحُونَ
மாலையில் ஓட்டி வருகிறீர்கள்
وَحِينَ تَسْرَحُونَ
இன்னும் நேரத்தில்/மேய்க்க ஓட்டிச் செல்கிறீர்கள்

Wa lakum feehaa jamaalun heena tureehoona wa heena tasrahoon

நீங்கள் அவற்றை (மேய்த்து) மாலையில் ஓட்டி வரும் பொழுதும் (மேய்ச்சலுக்குக்) காலையில் ஓட்டிச் செல்லும்பொழுதும் அவை உங்களுக்கு அழகாய் இருக்கின்றன.

Tafseer

وَتَحْمِلُ
அவை சுமக்கின்றன
أَثْقَالَكُمْ
சுமைகளை/உங்கள்
إِلَىٰ بَلَدٍ
ஊருக்கு
لَّمْ تَكُونُوا۟
நீங்கள் இல்லை
بَٰلِغِيهِ
அடைபவர்களாக/அதை
إِلَّا
தவிர
بِشِقِّ ٱلْأَنفُسِۚ
மிகுந்த சிரமத்துடன்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكُمْ
உங்கள் இறைவன்
لَرَءُوفٌ
மகா இரக்கமுள்ளவன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Wa tahmilu asqaalakum ilaa baladil lam takoonoo baaligheehi illaa bishiqqil anfus; inna Rabbakum la Ra'oofur Raheem

மிகக் கஷ்டத்துடனன்றி நீங்கள் செல்ல முடியாத ஊர்களுக்கு அவை (உங்களையும்) உங்களுடைய பளுவான சுமைகளையும் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் (உங்கள் மீது) மிக்க இரக்கமுடையவனும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

Tafseer

وَٱلْخَيْلَ
இன்னும் குதிரைகளை
وَٱلْبِغَالَ
இன்னும் கோவேறு கழுதைகளை
وَٱلْحَمِيرَ
இன்னும் கழுதைகளை
لِتَرْكَبُوهَا
நீங்கள் ஏறிசெல்வதற்க்காக /அவற்றில்
وَزِينَةًۚ
அலங்காரத்திற்காக
وَيَخْلُقُ
இன்னும் படைப்புகள்
مَا
எவற்றை
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Walkhaila wal bighaala wal hameera litarkaboohaa wa zeenah; wa yakhluqu maa laa ta'lamoon

குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்.) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்.

Tafseer

وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பொறுப்பு
قَصْدُ ٱلسَّبِيلِ
நேர்/வழி
وَمِنْهَا
இன்னும் அவற்றில்
جَآئِرٌۚ
கோணலானது
وَلَوْ شَآءَ
அவன் நாடினால்
لَهَدَىٰكُمْ
நேர்வழி நடத்தி இருப்பான்/உங்களை
أَجْمَعِينَ
அனைவரையும்

Wa 'alal laahi qasdus sabeeli wa minhaa jaaa'ir; wa law shaaa'a lahadaakum ajma'een

(மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று,) அல்லாஹ்வை நாடிச்செல்லக்கூடிய நேரானவழி; மற்றொன்று) கோணலான வழி. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்திவிடுவான்.

Tafseer

هُوَ
அவன்
ٱلَّذِىٓ
எத்தகையவன்
أَنزَلَ
இறக்கினான்
مِنَ ٱلسَّمَآءِ
மேகத்திலிருந்து
مَآءًۖ
மழை நீரை
لَّكُم
உங்களுக்கு
مِّنْهُ
அதில்
شَرَابٌ
குடிநீர்
وَمِنْهُ
இன்னும் அதிலிருந்து
شَجَرٌ
மரங்கள்
فِيهِ
அவற்றில்
تُسِيمُونَ
மேய்க்கிறீர்கள்

Huwal lazeee anzala minas samaaa'i maaa'al lakum minhu sharaabunw wa minhu shajarun feehi tuseemoon

அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக்கொண்டே (வளர்ந்த) புற்பூண்டுகளும் இருக்கின்றன. அதிலே (உங்கள் கால்நடைகளை) மேய்க்கின்றீர்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துந் நஹ்ல்
القرآن الكريم:النحل
ஸஜ்தா (سجدة):50
ஸூரா (latin):An-Nahl
ஸூரா:16
வசனம்:128
Total Words:2854
Total Characters:7707
Number of Rukūʿs:16
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:70
Starting from verse:1901