Wa aatainaahum Aayaatinaa fakaanoo 'anhaa mu'rideen
நாம் அவர்களுக்கு நம்முடைய பல அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தும், அவைகளை அவர்கள் புறக்கணித்துக் கொண்டே வந்தார்கள்.
Wa kaanoo yanhitoona minal jibaali buyootan aamineen
அச்சமற்று வாழலாம் எனக்கருதி அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தார்கள்.
Fa akhazat humus saihatu musbiheen
அவர்களையும் விடியற்காலையில் (பெரும்) சப்தம் பிடித்துக்கொண்டது.
Famaaa aghnaa 'anhum maa kaanoo yaksiboon
அவர்கள் (தங்களை பாதுகாத்துக் கொள்ள) செய்திருந்தவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பலனளிக்கவில்லை.
Wa maa khalaqnas samaawaati wal arda wa maa bainahumaaa illaa bilhaqq; wa innas Saa'ata la aatiyatun fasfahis safhal jameel
வானங்களையும் பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் தக்க காரணமின்றி நாம் படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வரக்கூடியதே! (அதுவரையில் இத்துஷ்டர்களின் விஷமத்தை) நீங்கள் கண்ணியமான முறையில் புறக்கணித்து வாருங்கள்.
Inna Rabbaka Huwal khallaaqul 'aleem
நிச்சயமாக உங்களது இறைவனே (அனைத்தையும்) படைத்தவனும், இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
Wa laqad aatainaaka sab'am mnal masaanee wal Qur-aanal 'azeem
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு திரும்பத் திரும்ப ஓதக்கூடிய ஏழு வசனங்களை (உடைய "அல்ஹம்து" என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான குர்ஆனையும் அளித்திருக்கிறோம்.
Laa tamuddanna 'ainaika ilaa maa matta 'naa biheee azwaajam minhum wa laa tahzan 'alaihim wakhfid janaahaka lilmu 'mineen
(பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவைகளின் பக்கம் நீங்கள் உங்கள் இரு கண்களையும் நீட்டாதீர்கள்; நீங்கள் இவர்களுக்காக கவலையும் படாதீர்கள். எனினும், நீங்கள்நம்பிக்கையாளர்களுக்கு உங்களது பணிவான அன்பைக் காட்டுங்கள்.
Wa qul inneee anan nazeerul mubeen
அன்றி, "நிச்சயமாக நான் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்" என்றும் கூறுங்கள்.
Kamaaa anzalnaa 'alal muqtasimeen
(நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,