Skip to main content

رَبَّنَا
எங்கள் இறைவா
ٱغْفِرْ لِى
மன்னிப்பளி/எனக்கு
وَلِوَٰلِدَىَّ
இன்னும் என் தாய் தந்தைக்கு
وَلِلْمُؤْمِنِينَ
இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு
يَوْمَ يَقُومُ
நாளில்/நிறைவேறும்
ٱلْحِسَابُ
விசாரணை

Rabbanagh fir lee wa liwaalidaiya wa lilmu'mineena Yawma yaqoomul hisaab

எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!" (என்று பிரார்த்தித்தார்.)

Tafseer

وَلَا تَحْسَبَنَّ
எண்ணி விடாதீர்
ٱللَّهَ
அல்லாஹ்வை
غَٰفِلًا
கவனிக்காதவனாக
عَمَّا يَعْمَلُ
செய்வதைப் பற்றி
ٱلظَّٰلِمُونَۚ
அக்கிரமக்காரர்கள்
إِنَّمَا
பிற்படுத்துவதெல்லாம்
يُؤَخِّرُهُمْ
பிற்படுத்துவதெல்லாம் அவர்களை
لِيَوْمٍ
ஒரு நாளுக்காக
تَشْخَصُ
கூர்ந்து விழித்திடும்
فِيهِ
அதில்
ٱلْأَبْصَٰرُ
பார்வைகள்

Wa laa tahsabannal laaha ghaafilan 'ammaa ya'maluz zaalimoon; innamaa yu'akh khiruhum li Yawmin tashkhasu feehil absaar

(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான்!

Tafseer

مُهْطِعِينَ
விரைந்தவர்களாக
مُقْنِعِى
உயர்த்தியவர்களாக
رُءُوسِهِمْ
தங்கள் தலைகளை
لَا يَرْتَدُّ
திரும்பாது
إِلَيْهِمْ
அவர்களிடம்
طَرْفُهُمْۖ
அவர்களின் பார்வை
وَأَفْـِٔدَتُهُمْ
அவர்களுடைய உள்ளங்கள்
هَوَآءٌ
வெற்றிடமாக

Muhti'eena muqni'ee ru'oosihim laa yartaddu ilaihim tarfuhum wa af'idatuhum hawaaa'

(அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும்.

Tafseer

وَأَنذِرِ
எச்சரிப்பீராக
ٱلنَّاسَ
மக்களை
يَوْمَ
நாள்
يَأْتِيهِمُ
அவர்களுக்கு வரும்
ٱلْعَذَابُ
வேதனை
فَيَقُولُ
கூறுவர்
ٱلَّذِينَ
எவர்கள்
ظَلَمُوا۟
அநியாயம் செய்தனர்
رَبَّنَآ
எங்கள் இறைவா
أَخِّرْنَآ
எங்களை பிற்படுத்து
إِلَىٰٓ
வரை
أَجَلٍ
ஒரு தவனை
قَرِيبٍ
சமீபமானது
نُّجِبْ
பதிலளிப்போம்
دَعْوَتَكَ
உன் அழைப்புக்கு
وَنَتَّبِعِ
இன்னும் பின்பற்றுவோம்
ٱلرُّسُلَۗ
தூதர்களை
أَوَلَمْ تَكُونُوٓا۟
நீங்கள் இருக்கவில்லையா?
أَقْسَمْتُم
சத்தியம் செய்தீர்கள்
مِّن قَبْلُ
இதற்கு முன்னர்
مَا لَكُم
உங்களுக்கு இல்லை
مِّن زَوَالٍ
அழிவே

Wa anzirin naasa Yawma yaateehimul 'azaabu fa yaqoolul lazeena zalamoo Rabbanaaa akhkhirnaaa ilaaa ajalin qareebin nujib da'wataka wa nattabi 'ir Rusul; awalam takoonooo aqsamtum min qablu maa lakum min zawaal

ஆகவே, (நபியே!) இத்தகைய வேதனை நாள் வருவதைப் பற்றி நீங்கள் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். வரம்பு மீறியவர்கள் (அந்நாளில் தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு சொற்பத் தவணையளி! நாங்கள் உன் அழைப்புக்கு (இனி) செவி கொடுத்து, (உன்) தூதரைப் பின்பற்றி நடப்போம்" என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) "இதற்கு முன்னர் நீங்கள் உங்களு(டைய இவ்வுலக வாழ்க்கை)க்கு அழிவே இல்லை என்று சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?" (என்று கேட்பான்.)

Tafseer

وَسَكَنتُمْ
இன்னும் வசித்தீர்கள்
فِى مَسَٰكِنِ
வசிப்பிடங்களில்
ٱلَّذِينَ
எவர்கள்
ظَلَمُوٓا۟
தீங்கிழைத்தனர்
أَنفُسَهُمْ
தமக்குத்தாமே
وَتَبَيَّنَ
இன்னும் தெளிவானது
لَكُمْ كَيْفَ
உங்களுக்கு/எப்படி
فَعَلْنَا
நாம் செய்தோம்
بِهِمْ
அவர்களுக்கு
وَضَرَبْنَا
இன்னும் விவரித்தோம்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْأَمْثَالَ
உதாரணங்களை

Wa sakantum fee masaakinil lazeena zalamooo anfusahum wa tabaiyana lakum kaifa fa'alnaa bihim wa darabnaa lakumul amsaal

அன்றி "தமக்குத்தாமே தீங்கிழைத்து(க் கொண்டு அழிந்து போனவர்கள்) வசித்திருந்த இடத்தில் நீங்களும் வசித்திருக்க வில்லையா? (என்றும்), நாம் அவர்களை என்ன செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கவில்லையா? (இதனைப் பற்றி) உங்களுக்குப் பல உதாரணங்களையும் நாம் எடுத்துக் கூற வில்லையா" (என்றும் பதில் கூறுவான்.)

Tafseer

وَقَدْ
திட்டமாக
مَكَرُوا۟
சூழ்ச்சி செய்தனர்
مَكْرَهُمْ
தங்கள் சூழ்ச்சியை
وَعِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
مَكْرُهُمْ
அவர்களுடைய சூழ்ச்சி
وَإِن كَانَ
இருந்தாலும்
مَكْرُهُمْ
சூழ்ச்சி அவர்களுடைய
لِتَزُولَ
பெயர்த்துவிடும்படி
مِنْهُ
அதனால்
ٱلْجِبَالُ
மலைகள்

Wa qad makaroo makrahum wa 'indal laahi makruhum wa in kaana makruhum litazoola minhul jibaal

எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை இறைவன் முன்பாகவே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகளோ மலைகளையும் பெயர்த்து விடக்கூடியவைகளாக இருக்கின்றன! (ஆயினும், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றும் பலிக்கப் போவதில்லை!)

Tafseer

فَلَا تَحْسَبَنَّ
நிச்சயமாகஎண்ணாதீர்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مُخْلِفَ
மீறுபவனாக
وَعْدِهِۦ
தனது வாக்கை
رُسُلَهُۥٓۗ
தனது தூதர்களுக்கு
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
ذُو ٱنتِقَامٍ
பழிவாங்குபவன்

Falaa tahsabannal laaha mukhlifa wa'dihee Rusulah; innal laaha 'azeezun zuntiqaam

அல்லாஹ் தன்னுடைய தூதருக்களித்த வாக்குறுதியில் அவன் தவறி விடுவான் என்று (நபியே!) நீங்கள் ஒருகாலும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (அவர்கள் அனைவரையும்) மிகைத்தவனும் பழிவாங்குபவனாகவும் இருக்கிறான்.

Tafseer

يَوْمَ
நாளில்
تُبَدَّلُ ٱلْأَرْضُ
மாற்றப்படும்/பூமி
غَيْرَ ٱلْأَرْضِ
வேறு பூமியாக
وَٱلسَّمَٰوَٰتُۖ
இன்னும் வானங்கள்
وَبَرَزُوا۟
இன்னும் வெளிப்படுவர்
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
ٱلْوَٰحِدِ
ஒருவன்
ٱلْقَهَّارِ
அடக்கி ஆளுபவன்

Yawma tubaddalul ardu ghairal ardi wassamaawaatu wa barazoo lillaahil Waahidil Qahhaar

(நபியே! ஒரு நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்:) அந்நாளில் இந்தப் பூமியை மாற்றி வேறுவித பூமியாக அமைக்கப் பட்டுவிடும்; வானங்களும் அவ்வாறே. (ஒவ்வொருவரும் தத்தம் இடத்திலிருந்து) வெளிப்பட்டு அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் சந்நிதியில் கூடி விடுவார்கள்.

Tafseer

وَتَرَى
இன்னும் காண்பீர்
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளை
يَوْمَئِذٍ
அந்நாளில்
مُّقَرَّنِينَ
பிணைக்கப்பட்டவர்களாக
فِى ٱلْأَصْفَادِ
விலங்குகளில்

Wa taral mujrimeena Yawma 'izim muqarraneena filasfaad

அன்றி, குற்றவாளிகள் அனைவரும், அந்நாளில் விலங்கிடப்பட்டிருப்பதையும் நீங்கள் காண்பீர்கள்.

Tafseer

سَرَابِيلُهُم
சட்டைகள்/அவர்களுடைய
مِّن قَطِرَانٍ
தாரினால்
وَتَغْشَىٰ
இன்னும் சூழும்
وُجُوهَهُمُ
அவர்களுடைய முகங்கள்
ٱلنَّارُ
நெருப்பு

Saraabeeluhum min qatiraaninw wa taghshaa wujoohahumun Naar

அவர்களுடைய சட்டைகள் தாரால் செய்யப்பட்டிருக்கும். அவர்களுடைய முகத்தை நெருப்பு பொசுக்கும்.

Tafseer