Skip to main content

قُل
கூறுவீராக
لِّعِبَادِىَ
என் அடியார்களுக்கு
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
يُقِيمُوا۟
நிலை நிறுத்தட்டும்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَيُنفِقُوا۟
இன்னும் தானம் செய்யட்டும்
مِمَّا رَزَقْنَٰهُمْ
நாம் வசதியளித்தவற்றில்/அவர்களுக்கு
سِرًّا
இரகசியமாக
وَعَلَانِيَةً
இன்னும் வெளிப்படையாக
مِّن قَبْلِ
முன்னர்
أَن يَأْتِىَ
வருவதற்கு
يَوْمٌ
ஒரு நாள்
لَّا
இல்லை
بَيْعٌ
கொடுக்கல் வாங்கல்
فِيهِ
அதில்
وَلَا
இல்லை
خِلَٰلٌ
நட்பு

Qul li'ibaadiyal lazeena aamanoo yuqeemus Salaata wa yunfiqoo mimmaa razaqnaahum sirranw wa 'alaaniyatam min qabli any yaatiya Yawmul laa bai'un feehi wa laa khilaal

(நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தொழுகையைக் கடைபிடித்தொழுகவும். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தானம் செய்யவும். கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத நாள் வருவதற்கு முன்னதாகவே (இவ்வாறு செய்யவும்.)

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்தான்
ٱلَّذِى
எத்தகையவன்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مَآءً
மழையை
فَأَخْرَجَ
வெளிப்படுத்தினான்
بِهِۦ
அதைக் கொண்டு
مِنَ ٱلثَّمَرَٰتِ
கனிகளில்
رِزْقًا لَّكُمْۖ
உணவாக/உங்களுக்கு
وَسَخَّرَ لَكُمُ
வசப்படுத்தினான்/உங்களுக்கு/கப்பலை
لِتَجْرِىَ
அது செல்வதற்காக
فِى ٱلْبَحْرِ
கடலில்
بِأَمْرِهِۦۖ
அவனுடைய கட்டளையைக் கொண்டு
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْأَنْهَٰرَ
ஆறுகளை

Allaahul lazee khalaqas samaawaati wal arda wa anzala minas samaaa'i maaa'an faakhraja bihee minas samaraati rizqal lakum wa sakhkhara lakumul fulka litajriya fil bahri bi amrihee wa sakhkhara lakumul anhaar

அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக(ப் பற்பல) கனி வர்க்கங்களையும் வெளிப்படுத்துகின்றான். (நீங்கள் பயணம் செய்யும் பொருட்டுத்) தன் கட்டளையைக் கொண்டு கப்பலை உங்கள் இஷ்டப்படி கடலில் செல்ல வைக்கிறான். ஆறுகளையும், (கால்வாய்களையும்) உங்கள் விருப்பப்படி பாய வசதியளித்தான்.

Tafseer

وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلشَّمْسَ
சூரியனை
وَٱلْقَمَرَ
இன்னும் சந்திரனை
دَآئِبَيْنِۖ
தொடர்ந்து செயல்படக்கூடியதாக
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
لَكُمُ
உங்களுக்கு
ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
இரவை/இன்னும் பகலை

Wa sakhkhara lakumush shamsa walqamara daaa'ibaini wa sakhkhara lakumul laila wannahaar

(தவறாது) ஒழுங்காக நடைபெற்று வருமாறு சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பயனளிக்கக் கூடிய விதத்தில் (படைத்து) அமைத்தான். (மாறி மாறி) வரக்கூடிய இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான்.

Tafseer

وَءَاتَىٰكُم
தந்தான்/உங்களுக்கு
مِّن كُلِّ
நீங்கள் கேட்டதிலிருந்தெல்லாம்/அவனிடம்
وَإِن تَعُدُّوا۟
நீங்கள் கணக்கிட்டால்
نِعْمَتَ
அருளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَا تُحْصُوهَآۗ
நீங்கள் எண்ண முடியாது/அதை
إِنَّ
நிச்சயமாக
ٱلْإِنسَٰنَ
மனிதன்
لَظَلُومٌ
மகா அநியாயக்காரன்
كَفَّارٌ
மிக நன்றிகெட்டவன்

Wa aataakum min kulli maa sa altumooh; wa in ta'uddoo ni'matal laahi laa tuhsoohaa; innal insaana lazaloo mun kaffaar

(இவையன்றி) நீங்கள் கேட்டவைகளை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே, அல்லாஹ்வுடைய அருட் கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதனை உங்களால் எண்ண முடியாது! (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறவனாகவும், மிக நன்றிகெட்டவனாகவும் இருக்கிறான்.

Tafseer

وَإِذْ قَالَ
கூறியபோது
إِبْرَٰهِيمُ
இப்றாஹீம்
رَبِّ
என் இறைவா
ٱجْعَلْ
ஆக்கு
هَٰذَا ٱلْبَلَدَ
இந்த ஊரை
ءَامِنًا
அபயமளிப்பதாக
وَٱجْنُبْنِى
இன்னும் தூரமாக்கு/என்னை
وَبَنِىَّ
இன்னும் என் பிள்ளைகளை
أَن نَّعْبُدَ
நாங்கள் வணங்குவதை
ٱلْأَصْنَامَ
சிலைகளை

Wa iz qaala Ibraaheemu Rabbij 'al haazal balada aaminanw wajnubnee wa baniyya an na'budal asnaam

இப்ராஹீம் (தன் இறைவனை நோக்கிக்) கூறியதை (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (அவர்கள் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கி வைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக!

Tafseer

رَبِّ
என் இறைவா
إِنَّهُنَّ
நிச்சயமாக இவை
أَضْلَلْنَ
வழி கெடுத்தன
كَثِيرًا
பலரை
مِّنَ ٱلنَّاسِۖ
மக்களில்
فَمَن
ஆகவே, எவர்
تَبِعَنِى
பின்பற்றினார்/என்னை
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
مِنِّىۖ
என்னை சேர்ந்த
وَمَنْ
இன்னும் எவர்
عَصَانِى
மாறு செய்தார்/எனக்கு
فَإِنَّكَ
நிச்சயமாக நீ
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Rabbi innahunna adlalna kaseeram minan naasi faman tabi'anee fa innahoo minnee wa man 'asaanee fa innaka Ghafoorur Raheem

என் இறைவனே! நிச்சயமாக இச்சிலைகள் மனிதர்களில் பலரை வழி கெடுத்து விட்டன. (ஆகவே, எவன் சிலைகளை வணங்காது) என்னைப் பின்பற்றுகிறானோ அவன்தான் நிச்சயமாக என்னில் (என் சந்ததியில்) உள்ளவன்; எவன் எனக்கு மாறு செய்கிறானோ (அவன் என் சந்ததி இல்லை. எனினும், என் இறைவனே!) நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும், கிருபை செய்பவனுமாக இருக்கிறாய் (என்றும்)

Tafseer

رَّبَّنَآ
எங்கள் இறைவா
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَسْكَنتُ
வசிக்க வைத்தேன்
مِن ذُرِّيَّتِى
என் சந்ததிகளில் சில
بِوَادٍ
ஒரு பள்ளத்தாக்கில்
غَيْرِ ذِى
விவசாயமற்றது
عِندَ
அருகில்
بَيْتِكَ
உன் வீட்டின்
ٱلْمُحَرَّمِ
புனிதமாக்கப்பட்டது
رَبَّنَا
எங்கள் இறைவா
لِيُقِيمُوا۟
அவர்கள் நிலைநிறுத்துவதற்காக
ٱلصَّلَوٰةَ
அவர்கள் தொழுகையை
فَٱجْعَلْ
ஆகவே ஆக்கு
أَفْـِٔدَةً
உள்ளங்களை
مِّنَ ٱلنَّاسِ
மக்களிலிருந்து
تَهْوِىٓ
ஆசைப்படக்கூடியதாக
إِلَيْهِمْ
அவர்கள் பக்கம்
وَٱرْزُقْهُم
இன்னும் உணவளி/அவர்களுக்கு
مِّنَ ٱلثَّمَرَٰتِ
கனிகளிலிருந்து
لَعَلَّهُمْ يَشْكُرُونَ
அவர்கள் நன்றி செலுத்துவதற்காக

Rabbanaaa inneee askantu min zurriyyatee biwaadin ghairi zee zar'in 'inda Baitikal Muharrami Rabbanaa liyuqeemus Salaata faj'al af'idatam minan naasi tahweee ilaihim warzuqhum minas samaraati la'allahum yashkuroon

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாயமற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்.) மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நோக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்.

Tafseer

رَبَّنَآ
எங்கள் இறைவா
إِنَّكَ
நிச்சயமாக நீ
تَعْلَمُ
அறிவாய்
مَا
எதை
نُخْفِى
நாங்கள் மறைப்போம்
وَمَا
எதை
نُعْلِنُۗ
வெளிப்படுத்துவோம்
وَمَا يَخْفَىٰ
மறையாது
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
مِن شَىْءٍ
எதுவும்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَا فِى
இன்னும் வானத்தில்

Rabbanaaa innaka ta'lamu maa nukhfee wa maa nu'lin; wa maa yakhfaa 'alal laahi min shai'in fil ardi wa laa fis samaaa'

எங்கள் இறைவனே! நாங்கள் (உள்ளங்களில்) மறைத்துக்கொள்வதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். வானத்திலோ பூமியிலோ உள்ளவற்றில் யாதொன்றும் அல்லாஹ்வாகிய உனக்கு மறைந்ததல்ல.

Tafseer

ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
ٱلَّذِى
எத்தகையவன்
وَهَبَ
வழங்கினான்
لِى
எனக்கு
عَلَى ٱلْكِبَرِ
வயோதிகத்தில்
إِسْمَٰعِيلَ
இஸ்மாயீலை
وَإِسْحَٰقَۚ
இன்னும் இஸ்ஹாக்கை
إِنَّ
நிச்சயமாக
رَبِّى
என் இறைவன்
لَسَمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلدُّعَآءِ
பிரார்த்தனையை

Alhamdu lillaahil lazee wahaba lee 'alal kibari Ismaa'eela wa Ishaaq; inna Rabbee lasamee'ud du'aaa

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியது; அவன்தான் இவ்வயோதிக(கால)த்தில் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவனாக இருக்கிறான்.

Tafseer

رَبِّ
என் இறைவா
ٱجْعَلْنِى
ஆக்கு/என்னை
مُقِيمَ
நிலைநிறுத்துபவனாக
ٱلصَّلَوٰةِ
தொழுகையை
وَمِن ذُرِّيَّتِىۚ
இன்னும் என் சந்ததிகளிலிருந்து
رَبَّنَا
எங்கள் இறைவா
وَتَقَبَّلْ
இன்னும் ஏற்றுக் கொள்
دُعَآءِ
என் பிரார்த்தனையை

Rabbij 'alnee muqeemas Salaati wa min zurriyyatee Rabbanaa wa taqabbal du'aaa'

என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக!

Tafseer