Skip to main content

قَالَتْ
கூறினா(ர்க)ள்
لَهُمْ
அவர்களுக்கு
رُسُلُهُمْ
தூதர்கள்/ அவர்களுடைய
إِن نَّحْنُ
இல்லை/நாங்கள்
إِلَّا
தவிர
بَشَرٌ
மனிதர்களே
مِّثْلُكُمْ
உங்களைப் போன்ற
وَلَٰكِنَّ
எனினும்
ٱللَّهَ
அல்லாஹ்
يَمُنُّ
அருள் புரிகிறான்
عَلَىٰ
மீது
مَن يَشَآءُ
எவர்/நாடுவான்
مِنْ عِبَادِهِۦۖ
தன் அடியார்களில்
وَمَا كَانَ
முடியாது/எங்களுக்கு
أَن نَّأْتِيَكُم
நாம் வருவது/உங்களிடம்
بِسُلْطَٰنٍ إِلَّا
ஓர் ஆதாரத்தைக் கொண்டு/தவிர
بِإِذْنِ
அனுமதி கொண்டே
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீதே
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கட்டும்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்

Qaalat lahum Rusuluhum in nahnu illaa basharum mislukum wa laakinnal laaha yamunnu 'alaa mai yashaaa'u min 'ibaadihee wa maa kaana lanaaa an naatiyakum bisul taanin illaa bi iznil laah; wa 'alal laahi falyatawakkalil mu'minonn

அதற்கு அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி (உங்கள் விருப்பப்படி) யாதொரு ஆதாரமும் நாம் உங்களிடம் கொண்டு வருவதற்கில்லை" (என்று கூறி நம்பிக்கையாளர்களை நோக்கி,) "நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வையே நம்பவும்" என்றும்,

Tafseer

وَمَا لَنَآ
எங்களுக்கென்ன?
أَلَّا نَتَوَكَّلَ
நாங்கள் நம்பிக்கை வைக்காதிருக்க
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
وَقَدْ هَدَىٰنَا
நேர்வழிபடுத்தினான்/எங்களை
سُبُلَنَاۚ
எங்கள் பாதைகளில்
وَلَنَصْبِرَنَّ
நிச்சயமாக பொறுப்போம்
عَلَىٰ مَآ
நீங்கள் துன்புறுத்துவதில் எங்களை
وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ் மீதே
فَلْيَتَوَكَّلِ
ஆகவே நம்பிக்கை வைக்கட்டும்
ٱلْمُتَوَكِّلُونَ
நம்பிக்கை வைப்பவர்கள்

Wa maa lanaa allaa natawakkala 'alal laahi wa qad hadaanaa subulanaa; wa lanasbiranna 'alaa maaa aazaitumoonaa; wa 'alal laahi falyatawakkalil mutawakkiloon

"நாங்கள் அல்லாஹ்வை நம்பாதிருக்க எங்களுக்கென்ன (தடை நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் எங்களுக்கு நேரான வழியை அறிவித்தான். (நிராகரிப்பவர்களே!) நீங்கள் எங்களுக்கு இழைக்கும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு உறுதியாக இருப்போம். ஆகவே, நம்புபவர்கள் அனைவரும் அல்லாஹ்வையே நம்பவும்" என்றும் கூறினார்கள்.

Tafseer

وَقَالَ
கூறினார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
لِرُسُلِهِمْ
தங்கள் தூதர்களிடம்
لَنُخْرِجَنَّكُم
நிச்சயமாக வெளியேற்றுவோம்/உங்களை
مِّنْ أَرْضِنَآ
எங்கள் பூமியிலிருந்து
أَوْ
அல்லது
لَتَعُودُنَّ
நீங்கள் நிச்சயமாக திரும்பிடவேண்டும்
فِى مِلَّتِنَاۖ
எங்கள் மார்க்கத்தில்
فَأَوْحَىٰٓ
ஆகவே வஹீ அறிவித்தான்
إِلَيْهِمْ
அவர்களுக்கு
رَبُّهُمْ
இறைவன்/அவர்களுடைய
لَنُهْلِكَنَّ
நிச்சயமாக அழிப்போம்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை

Wa qaalal lazeena kafaroo li Rusulihim lanukhrijanna kum min aardinaaa aw lata'oo dunna fee millatinaa fa awhaaa ilaihim Rabbuhum lanuhlikannaz zalimeen

தங்களிடம் வந்த (நம்முடைய) தூதர்களை நிராகரித்தவர்கள் அவர்களை நோக்கி, "நிச்சயமாக நீங்கள் நம்முடைய மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) "நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்" என்றும்

Tafseer

وَلَنُسْكِنَنَّكُمُ
நிச்சயமாக குடி அமர்த்துவோம்/உங்களை
ٱلْأَرْضَ
பூமியில்
مِنۢ
பின்னர்
بَعْدِهِمْۚ
பின்னர் அவர்களுக்கு
ذَٰلِكَ
இது
لِمَنْ
எவருக்கு
خَافَ
பயந்தார்
مَقَامِى
என் முன்னால் நிற்பதை
وَخَافَ
இன்னும் பயந்தார்
وَعِيدِ
என் எச்சரிக்கையை

Wa lanuskinan nakumul arda mim ba'dihim; zaalika liman khaafa maqaamee wa khaafa wa'eed

"உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்" என்றும் வஹீ மூலம் அறிவித்து "இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கின்றானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்" என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.,

Tafseer

وَٱسْتَفْتَحُوا۟
ஆகவே வெற்றிபெற முயற்சித்தார்கள்
وَخَابَ
அழிந்தார்(கள்)
كُلُّ
எல்லோரும்
جَبَّارٍ
பிடிவாதக்காரர்(கள்)
عَنِيدٍ
வம்பர்(கள்)

Wastaftahoo wa khaaba kullu jabbaarin 'aneed

ஆகவே, (நபிமார்கள்) அனைவரும் (அல்லாஹ்வின்) உதவியைக் கோரினார்கள். பிடிவாதக்கார வம்பர்கள் அனைவருமே ஏமாற்றமடைந்(து அழிந்)தனர்.

Tafseer

مِّن وَرَآئِهِۦ
அவனுக்கு பின்புறத்தில்
جَهَنَّمُ
நரகம்
وَيُسْقَىٰ
இன்னும் புகட்டப்படுவான்
مِن
இருந்து
مَّآءٍ
நீர்
صَدِيدٍ
சீழ்

Minw waraaa'ihee jahannamu wa yusqaa mim maaa'in sadeed

அவர்களுக்கு பின்புறம் நரகம்தான் இருக்கிறது. (அங்குதான் அவர்கள் செல்ல வேண்டும். நரகவாசிகளின் தேகத்திலிருந்து வடியும்) சீழ்தான் அவர்களுக்கு (நீராக)ப் புகட்டப்படும்.

Tafseer

يَتَجَرَّعُهُۥ
அள்ளிக் குடிப்பான்/அதை
وَلَا يَكَادُ
இலகுவாக குடித்து விடமாட்டான்/அதை
وَيَأْتِيهِ
வரும்/அவனுக்கு
ٱلْمَوْتُ
மரணம்
مِن كُلِّ
ஒவ்வொரு இடத்திலிருந்தும்
وَمَا هُوَ
இல்லை/அவன்
بِمَيِّتٍۖ
இறந்து விடுபவனாக
وَمِن وَرَآئِهِۦ
அவனுக்குப்பின்னால்
عَذَابٌ
வேதனை
غَلِيظٌ
கடினமானது

Yatajarra'uhoo wa laa yakaadu yuseeghuhoo wa yaateehil mawtu min kulli makaaninw wa maa huwa bimaiyitinw wa minw waraaa'ihee 'azaabun ghaleez

அதனை அவர்கள் (மிகக் கஷ்டத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவார்கள். எனினும், அது அவர்களுடைய தொண்டைகளில் இறங்காது; (விக்கிக்கொள்ளும்.) ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணமே அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்; எனினும், அவர்கள் இறந்துவிட மாட்டார்கள். இதற்குப் பின் கடினமான வேதனையையும் அவர்கள் சந்திக்க நேரிடும்.

Tafseer

مَّثَلُ
உதாரணம்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
بِرَبِّهِمْۖ
தங்கள் இறைவனை
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய செயல்கள்
كَرَمَادٍ
சாம்பல்
ٱشْتَدَّتْ
கடுமையாக அடித்துச் சென்றது
بِهِ
அதை
ٱلرِّيحُ
காற்று
فِى يَوْمٍ
காலத்தில்
عَاصِفٍۖ
புயல்
لَّا يَقْدِرُونَ
அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
مِمَّا كَسَبُوا۟
அவர்கள் செய்ததில்
عَلَىٰ شَىْءٍۚ
எதையும்
ذَٰلِكَ هُوَ
இதுதான்
ٱلضَّلَٰلُ
வழிகேடு
ٱلْبَعِيدُ
தூரமானது

Masalul lazeena kafaroo bi Rabbihim a'maaluhum karamaadinish taddat bihir reehu fee yawmin 'aasif; laa yaqdiroona mimmaa kasaboo 'alaa shai'; zaalika huwad dalaalul ba'eed

எவர்கள் தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபாலிப்பவனை நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய செயல்களின் உதாரணம்: சாம்பலைப் போல் இருக்கிறது! புயல் காலத்தில் அடித்த கனமான காற்று அதனை அடித்துக்கொண்டு போய்விட்டது. தாங்கள் தேடிக் கொண்டதில் ஒன்றையும் அவர்கள் அடைய மாட்டார்கள். இது வெகு தூரமான வழிகேடாகும்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
خَلَقَ
படைத்துள்ளான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
بِٱلْحَقِّۚ
உண்மையைக் கொண்டு
إِن يَشَأْ
அவன் நாடினால்
يُذْهِبْكُمْ
போக்கி விடுவான்/உங்களை
وَيَأْتِ
இன்னும் வருவான்
بِخَلْقٍ
படைப்பைக் கொண்டு
جَدِيدٍ
புதியது

Alam tara annal laaha khalaqas samaawaati wal arda bilhaqq; iny yashaa yuzhibkum wa yaati bikhalqin jadeed

நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் மிக்க மேலான அமைப்பில் படைத்திருக்கிறான் என்பதை (மனிதனே!) நீ கவனிக்கவில்லையா? அவன் விரும்பினால் உங்களைப் போக்கி விட்டு (உங்களைப் போன்ற) புதியதோர் படைப்பைக் கொண்டு வந்துவிடுவான்.

Tafseer

وَمَا ذَٰلِكَ
இல்லை/அது
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
بِعَزِيزٍ
சிரமமானதாக

Wa maa zaalika 'alal laahi bi 'azeez

அல்லாஹ்வுக்கு இது ஒரு சிரமமான காரியம் அல்ல.

Tafseer