Skip to main content

قَالُوا۟
கூறினார்கள்
سَنُرَٰوِدُ
தொடர்ந்து கேட்போம்
عَنْهُ
அவரை
أَبَاهُ
அவருடைய தந்தையிடம்
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
لَفَٰعِلُونَ
செய்பவர்கள்தான்

Qaaloo sanuraawidu 'anhu abaahu wa innaa lafaa'iloon

அதற்கவர்கள் "நாங்கள் அவருடைய தந்தையிடம் கேட்டுக்கொண்டு (அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு) வேண்டிய முயற்சிகளை நிச்சயமாகச் செய்வோம்" என்று கூறினார்கள்.

Tafseer

وَقَالَ
கூறினார்
لِفِتْيَٰنِهِ
தன் வாலிபர்களிடம்
ٱجْعَلُوا۟
வையுங்கள்
بِضَٰعَتَهُمْ
அவர்களுடைய கிரயத்தை
فِى رِحَالِهِمْ
அவர்களுடைய மூட்டைகளில்
لَعَلَّهُمْ يَعْرِفُونَهَآ
அவர்கள் அறியவேண்டும்/அதை
إِذَا ٱنقَلَبُوٓا۟
அவர்கள் திரும்பினால்
إِلَىٰٓ أَهْلِهِمْ
தங்கள் குடும்பத்திடம்
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்பி வரவேண்டும்

Wa qaala lifityaanihij 'aloo bidaa'atahum fee rihaalihim la'allahum ya'rifoonahaaa izan qalabooo ilaaa ahlihim la'allahum yarji'oon

(பின்னர் யூஸுஃப்) தன் ஆட்களை நோக்கி "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதனை அறிந்துகொண்டு (அதனை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்" என்று கூறினார்.

Tafseer

فَلَمَّا
போது
رَجَعُوٓا۟
அவர்கள் திரும்பினர்
إِلَىٰٓ أَبِيهِمْ
தந்தையிடம்/தம்
قَالُوا۟
கூறினர்
يَٰٓأَبَانَا
எங்கள் தந்தையே
مُنِعَ
தடுக்கப்பட்டது
مِنَّا
எங்களுக்கு
ٱلْكَيْلُ
அளவை
فَأَرْسِلْ
ஆகவே அனுப்புவீராக
مَعَنَآ
எங்களுடன்
أَخَانَا
சகோதரனை/எங்கள்
نَكْتَلْ
அளந்து (வாங்கி) வருவோம்
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
لَهُۥ
அவரை
لَحَٰفِظُونَ
பாதுகாப்பவர்கள்தான்

Falammaa raja'ooo ilaaa abeehim qaaloo yaaa abaanaa muni'a minnal kailu fa arsil ma'anaaa akhaanaa naktal wa innaa lahoo lahaafizoon

(தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்தபொழுது "எங்கள் தந்தையே! (புன்யாமீனையும் நாங்கள் அழைத்துச் செல்லாவிட்டால்) எங்களுக்கு(த் தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பி வையுங்கள். நாங்கள் தானியம் வாங்கிக் கொண்டு நிச்சயமாக அவரையும் பாதுகாத்து வருவோம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
هَلْ ءَامَنُكُمْ
நான் நம்புவதா?/உங்களை
عَلَيْهِ
இவர் விசயத்தில்
إِلَّا كَمَآ
தவிர/போல்
أَمِنتُكُمْ
நம்பினேன்/உங்களை
عَلَىٰٓ أَخِيهِ
இவருடைய சகோதரர் விஷயத்தில்
مِن قَبْلُۖ
முன்னர்
فَٱللَّهُ
அல்லாஹ்
خَيْرٌ
மிக மேலானவன்
حَٰفِظًاۖ
பாதுகாவலன்
وَهُوَ
அவன்
أَرْحَمُ
மகா கருணையாளன்
ٱلرَّٰحِمِينَ
அருள் புரிபவர்களில்

Qaala hal aamanukum 'alihi illaa kamaa amintukum 'alaaa akheehimin qabl; fal laahu khairun haafizanw wa Huwa arhamur Raahimeen

(அதற்கு யஃகூப்) "இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (முடியாது.) பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்" என்று கூறிவிட்டார்.

Tafseer

وَلَمَّا
போது
فَتَحُوا۟
அவர்கள் திறந்தனர்
مَتَٰعَهُمْ
தங்கள் பொருளை
وَجَدُوا۟
கண்டனர்
بِضَٰعَتَهُمْ
தங்கள் கிரயம்
رُدَّتْ
திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது
إِلَيْهِمْۖ
தங்களிடம்
قَالُوا۟
கூறினர்
يَٰٓأَبَانَا
எங்கள் தந்தையே
مَا نَبْغِىۖ
என்ன தேடுகிறோம்?
هَٰذِهِۦ
இதோ
بِضَٰعَتُنَا
நம் கிரயம்
رُدَّتْ
திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது
إِلَيْنَاۖ
நம்மிடமே
وَنَمِيرُ
தானியங்களைக் கொண்டு வருவோம்
أَهْلَنَا
நம் குடும்பத்திற்கு
وَنَحْفَظُ
இன்னும் காப்பாற்றுவோம்
أَخَانَا
சகோதரனை/எங்கள்
وَنَزْدَادُ
இன்னும் அதிகமாக்குவோம்
كَيْلَ
அளவையை
بَعِيرٍۖ
ஓர் ஒட்டகத்தின்
ذَٰلِكَ كَيْلٌ
இது/ஓர் அளவை
يَسِيرٌ
இலகுவானது

Wa lammaa fatahoo mataa 'ahum wajadoo bidaa'atahum ruddat ilaihim qaaloo yaaa abaanaa maa nabghee; haazihee bida 'atunaa ruddat ilainaa wa nameeru ahlanaa wa nahfazu akhaanaa wa nazdaadu kaila ba'eer; zaalika kailuny yaseer

பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு "எங்கள் தந்தையே! நமக்கு வேண்டியதென்ன? (பொருள்தானே!) இதோ! நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
لَنْ أُرْسِلَهُۥ
அனுப்பவே மாட்டேன்/அவரை
مَعَكُمْ
உங்களுடன்
حَتَّىٰ
வரை
تُؤْتُونِ
கொடுப்பீர்கள்/எனக்கு
مَوْثِقًا
ஓர் உறுதிமானத்தை
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَتَأْتُنَّنِى
நிச்சயமாக வருவீர்கள்/என்னிடம்
بِهِۦٓ
அவரைக் கொண்டு
إِلَّآ
தவிர
أَن يُحَاطَ
அழிவு ஏற்பட்டால்
بِكُمْۖ
உங்களுக்கு
فَلَمَّآ
போது
ءَاتَوْهُ
அவர்கள்கொடுத்தனர் அவருக்கு
مَوْثِقَهُمْ
தங்கள் உறுதிமானத்தை
قَالَ
கூறினார்
ٱللَّهُ
அல்லாஹ்வே
عَلَىٰ مَا
நாம் கூறுவதற்கு
وَكِيلٌ
பொறுப்பாளன்/சாட்சியாளன்

Qaala lan ursilahoo ma'akum hattaa tu'tooni mawsiqam minal laahis lataa tunnanee biheee illaaa nay yuhaata bikum falammaaa aatawhu mawsiqahum qaalal laahu 'alaa maa naqoolu Wakeel

(அதற்கு அவர்களின் தந்தை) "நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன். ஆயினும், உங்கள் அனைவரையுமே (யாதொரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலன்றி நிச்சயமாக அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுத்தாலன்றி" என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே அதற்கு அவர் "நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்" என்று (கூறி புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்.

Tafseer

وَقَالَ
இன்னும் கூறினார்
يَٰبَنِىَّ
என் பிள்ளைகளே
لَا تَدْخُلُوا۟
நுழையாதீர்கள்
مِنۢ بَابٍ
ஒரு வாசல் வழியாக
وَٰحِدٍ
ஒரே
وَٱدْخُلُوا۟
இன்னும் நுழையுங்கள்
مِنْ أَبْوَٰبٍ
வாசல்கள் வழியாக
مُّتَفَرِّقَةٍۖ
பல்வேறு
وَمَآ أُغْنِى
நான் தடுக்க முடியாது
عَنكُم
உங்களை விட்டும்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
مِن شَىْءٍۖ
எதையும்
إِنِ ٱلْحُكْمُ
இல்லை/அதிகாரம்
إِلَّا
தவிர
لِلَّهِۖ
அல்லாஹ்வுக்கே
عَلَيْهِ
அவன் மீதே
تَوَكَّلْتُۖ
நான் நம்பிக்கை வைத்து விட்டேன்
وَعَلَيْهِ
அவன் மீதே
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கவும்
ٱلْمُتَوَكِّلُونَ
நம்பிக்கை வைப்பவர்கள்

Wa qaala yaa baniyya laa tadkhuloo mim baabinw waa hidinw wadkhuloo min abwaabim mutafarriqah; wa maaa ughnee 'ankum minal laahi min shai'in; inil hukmu illaa lillaahi 'alaihi tawakkaltu wa 'alaihi fal yatawakkalil Mutawakkiloon

பின்னும் (அவர்களை நோக்கி) "என் அருமை மக்களே! (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள். அல்லாஹ்வின் கட்டளையில் யாதொன்றையும் நான் உங்களுக்குத் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை. நான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். பொறுப்பை ஒப்படைக்க விரும்பு பவர்களும் அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கவும்" என்றார்.

Tafseer

وَلَمَّا
போது
دَخَلُوا۟
நுழைந்தனர்
مِنْ حَيْثُ
முறையில்
أَمَرَهُمْ
கட்டளையிட்டார் அவர்களுக்கு
أَبُوهُم
தந்தை/தங்கள்
مَّا كَانَ
தடுப்பதாக இல்லை
عَنْهُم
அவர்களைவிட்டு
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
مِن شَىْءٍ
எதையும்
إِلَّا حَاجَةً
ஒரு தேவை/தவிர
فِى نَفْسِ
மனதில்
يَعْقُوبَ
யஃகூபுடைய
قَضَىٰهَاۚ
நிறைவேற்றினார்/அதை
وَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
لَذُو عِلْمٍ
அறிவுடையவர்
لِّمَا عَلَّمْنَٰهُ
நாம் கற்பித்த காரணத்தால்/அவருக்கு
وَلَٰكِنَّ
எனினும்
أَكْثَرَ
அதிகமானவர்(கள்)
ٱلنَّاسِ
மக்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa lammaa dakhaloo min haisu amarahum aboohum maa kaana yughnee 'anhum minal laahi min shai'in illaa haajatan fee nafsi Ya'qooba qadaahaa; wa innahoo lazoo 'ilmil limaa 'allamnaahu wa laakinna aksaran naasi laa ya'lamoon

(எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஃகூபினுடைய மனதிலிருந்த ஒரு எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய யாதொரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்க வில்லை. (ஏனென்றால், புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதனை) அறிந்த வராகவே இருந்தார். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதனை) அறியாதவர்களாகவே இருந்தனர்.

Tafseer

وَلَمَّا
போது
دَخَلُوا۟
நுழைந்தனர்
عَلَىٰ يُوسُفَ
யூஸுஃபிடம்
ءَاوَىٰٓ
ஒதுக்கிக் கொண்டார்
إِلَيْهِ
தன் பக்கம்
أَخَاهُۖ
தன் சகோதரனை
قَالَ
கூறினார்
إِنِّىٓ أَنَا۠
நிச்சயமாக நான்தான்
أَخُوكَ
உம் சகோதரன்
فَلَا تَبْتَئِسْ
ஆகவே வேதனைப்படாதே
بِمَا
எதன் காரணமாக
كَانُوا۟
இருந்தனர்
يَعْمَلُونَ
அவர்கள்செய்வார்கள்

Wa lammaa dakhaloo 'alaa Yoosufa aawaaa ilaihi akhaahu qaala inneee ana akhooka falaa tabta'is bimaa kaanoo ya'maloon

அவர்கள் அனைவரும் யூஸுஃபிடம் சென்றபொழுது, அவர் தன் சகோதரன் புன்யாமீனை(த் தனியாக அழைத்து) அமர்த்திக்கொண்டு (அவரை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுடைய சகோதரன் (யூஸுஃப்)தான். எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்" என்று (இரகசியமாகக்) கூறினார். (அன்றி, உங்களை நிறுத்திக்கொள்ள நான் ஓர் உபாயம் செய்வேன் என்றார்.)

Tafseer

فَلَمَّا جَهَّزَهُم
அவர் தயார்படுத்தியபோது/அவர்களுக்கு
بِجَهَازِهِمْ
பொருள்களை/அவர்களுடைய
جَعَلَ
வைத்தார்
ٱلسِّقَايَةَ
குவளையை
فِى رَحْلِ
சுமையில்
أَخِيهِ
தன் சகோதரனின்
ثُمَّ
பிறகு
أَذَّنَ
அறிவித்தார்
مُؤَذِّنٌ
ஓர் அறிவிப்பாளர்
أَيَّتُهَا ٱلْعِيرُ
ஓ! பயணக் கூட்டத்தார்களே!
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
لَسَٰرِقُونَ
திருடர்கள்தான்

Falammaa jahhazahum bijahaazihim ja'alas siqaayata fee rahli akheehi summa azzana mu'azzinun ayyatuhal'eeru innakum lasaariqoon

பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார்படுத்தியபோது தன்னுடைய சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்)குவளையை வைத்துவிட்டார். பின்னர் (அவர்கள் விடை பெற்றுச் சிறிது தூரம் செல்லவே) ஒருவன் அவர்களை (நோக்கி) "ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களாக இருக்கிறீர்கள்" என்று சப்தமிட்டான்.

Tafseer