Skip to main content

قَالَ
கேட்டார்
مَا خَطْبُكُنَّ
உங்கள்நிலைஎன்ன?
إِذْ رَٰوَدتُّنَّ
போது/ஆசைக்கு அழைத்தீர்கள்
يُوسُفَ
யூஸுஃபை
عَن نَّفْسِهِۦۚ
பலவந்தமாக
قُلْنَ
கூறினர்
حَٰشَ
பாதுகாப்பானாக
لِلَّهِ
அல்லாஹ்
مَا عَلِمْنَا
நாங்கள் அறியவில்லை
عَلَيْهِ
அவரிடத்தில்
مِن سُوٓءٍۚ
ஒரு தீங்கை
قَالَتِ
கூறினாள்
ٱمْرَأَتُ
மனைவி
ٱلْعَزِيزِ
அதிபரின்
ٱلْـَٰٔنَ
இப்போது
حَصْحَصَ
வெளிப்பட்டு விட்டது
ٱلْحَقُّ
உண்மை
أَنَا۠
நான்தான்
رَٰوَدتُّهُۥ
என் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரை
عَن نَّفْسِهِۦ
நிர்பந்தமாக
وَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
لَمِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்

Qaala maa khatbukunna iz raawattunna Yoosufa 'annafsih; qulna haasha lillaahi maa 'alimnaa 'alaihi min sooo'; qaalatim ra atul 'Azeezil 'aana hashasal haqq, ana raawat tuhoo 'an nafsihee wa innahoo laminas saadiqeen

(இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) "நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?" என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் "அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் யாதொரு தீங்கையும் அறியவில்லை" என்று கூறி விட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (இதனை மறுத்து அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்" என்று கூறினாள்.

Tafseer

ذَٰلِكَ
அது
لِيَعْلَمَ
அவர் அறிவதற்காக
أَنِّى لَمْ
நிச்சயமாகநான்/அவருக்கு துரோகம் செய்யவில்லை
بِٱلْغَيْبِ
மறைவில்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يَهْدِى
நல்வழி படுத்த மாட்டான்
كَيْدَ
சூழ்ச்சியை
ٱلْخَآئِنِينَ
துரோகிகளின்

Zaalika liya'lama annee lam akhunhu bilghaibi wa annal laaha laa yahdee kaidal khaaa'ineen

(இதனைக் கேள்வியுற்ற யூஸுஃப் "முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணைச் செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்ய வில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என் (பதை அறிவிப்)பதற்காகவுமே" (என்று கூறினார்).

Tafseer

وَمَآ أُبَرِّئُ
நான் தூய்மைப்படுத்த மாட்டேன்
نَفْسِىٓۚ
என் ஆன்மாவை
إِنَّ ٱلنَّفْسَ
நிச்சயமாக ஆன்மா
لَأَمَّارَةٌۢ
அதிகம் தூண்டக்கூடியதே
بِٱلسُّوٓءِ إِلَّا
பாவத்திற்கு/தவிர
مَا رَحِمَ
எது/அருள்புரிந்தான்
رَبِّىٓۚ
என் இறைவன்
إِنَّ رَبِّى
நிச்சயமாக என் இறைவன்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Wa maa ubarri'u nafsee; innan nafsa la ammaaratum bissooo'i illaa maa rahima Rabbee; inna Rabbee Ghafoorur Raheem

அன்றி, "நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்" என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்" (என்றார்.)

Tafseer

وَقَالَ
கூறினார்
ٱلْمَلِكُ
அரசர்
ٱئْتُونِى
வாருங்கள்/என்னிடம்
بِهِۦٓ
அவரைக் கொண்டு
أَسْتَخْلِصْهُ
பிரத்தியேகமாக நான் ஆக்கிக்கொள்வேன்/அவரை
لِنَفْسِىۖ
எனக்கென மட்டும்
فَلَمَّا
போது
كَلَّمَهُۥ
பேசினார்/அவருடன்
قَالَ
கூறினார்
إِنَّكَ
நிச்சயமாக நீர்
ٱلْيَوْمَ
இன்று
لَدَيْنَا
நம்மிடம்
مَكِينٌ
தகுதியுடையவர்
أَمِينٌ
நம்பிக்கையாளர்

Wa qaalal maliku' toonee biheee astakhlishu linafsee falammaa kallamahoo qaala innakal yawma ladainaa makeenun ameen

(யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்" என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) "நிச்சயமாக நீங்கள் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்கள்" என்றார்.

Tafseer

قَالَ
கூறினார்
ٱجْعَلْنِى
ஆக்குவீராக/என்னை
عَلَىٰ
மீது
خَزَآئِنِ
கஜானாக்கள்
ٱلْأَرْضِۖ
நாட்டின்
إِنِّى
நிச்சயமாக நான்
حَفِيظٌ
பாதுகாப்பவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Qaalaj 'alnee 'alaa khazaaa'inil ardi innee hafeezun 'aleem

(அதற்கவர்) "தேசியக் களஞ்சியங்களின் நிர்வாகியாக என்னை ஆக்கி விடுங்கள். நிச்சயமாக நான் அவற்றைப் பாதுகாக்க நன்கறிந்தவன்" என்று சொன்னார். (அவ்வாறே அரசர் ஆக்கினார்.)

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறே
مَكَّنَّا
வசதியளித்தோம்
لِيُوسُفَ
யூஸுஃபுக்கு
فِى ٱلْأَرْضِ
அந்நாட்டில்
يَتَبَوَّأُ
தங்கிக்கொள்வார்
مِنْهَا
அதில்
حَيْثُ
இடம்
يَشَآءُۚ
நாடுகின்றார்
نُصِيبُ
நாம் தருகிறோம்
بِرَحْمَتِنَا مَن
நம் அருளை/எவர்
نَّشَآءُۖ
நாடுகின்றோம்
وَلَا نُضِيعُ
வீணாக்க மாட்டோம்
أَجْرَ
கூலியை
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிபவர்களின்

Wa kazaalika makkannaa li Yoosufa fil ardi yatabawwa'u minhaa haisu yashaaaa'; nuseebu birahmatinaa man nashaaa'u wa laa nudee'u ajral muhsineen

யூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை.

Tafseer

وَلَأَجْرُ
திட்டமாக கூலி
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
خَيْرٌ
மேலானது
لِّلَّذِينَ
எவர்களுக்கு
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
يَتَّقُونَ
அஞ்சுகின்றவர்களாக

Wa la ajrul Aakhirati khairul lillazeena aamanoo wa kaanoo yattaqoon

எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கை யாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப் படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.)

Tafseer

وَجَآءَ
வந்தார்(கள்)
إِخْوَةُ
சகோதரர்கள்
يُوسُفَ
யூஸுஃபுடைய
فَدَخَلُوا۟
இன்னும் நுழைந்தார்கள்
عَلَيْهِ
அவரிடம்
فَعَرَفَهُمْ
அறிந்தார்/அவர்களை
وَهُمْ لَهُۥ
அவர்கள்/அவரை
مُنكِرُونَ
அறியாதவர்களாக

Wa jaaa'a ikhwatu Yoosufa fadakhaloo 'alaihi fa'arafahum wa hum lahoo munkiroon

ஆகவே, யூஸுஃபினுடைய சகோதரர்கள் அவரிடம் வந்தபொழுது, அவர்களை அவர் (தன் சகோதரர்கள்தாம் என) அறிந்துகொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறிந்து கொள்ளவில்லை.

Tafseer

وَلَمَّا
போது
جَهَّزَهُم
தயார்படுத்தினார் அவர்களுக்கு
بِجَهَازِهِمْ
சாமான்களை அவர்களுடைய
قَالَ
கூறினார்
ٱئْتُونِى
வாருங்கள் என்னிடம்
بِأَخٍ
ஒரு சகோதரனைக் கொண்டு
لَّكُم
உங்களுக்குள்ள
مِّنْ
மூலமாக
أَبِيكُمْۚ
உங்கள் தந்தை
أَلَا تَرَوْنَ
நீங்கள் கவனிக்கவில்லையா?
أَنِّىٓ
நிச்சயமாக நான்
أُوفِى
முழுமையாக்குவேன்
ٱلْكَيْلَ
அளவையை
وَأَنَا۠ خَيْرُ
நான் சிறந்தவன்
ٱلْمُنزِلِينَ
விருந்தளிப்பவர்களில்

Wa lammaa jahhazahum bijahaazihim qaala' toonee bi akhil lakum min abeekum; alaa tarawna anneee oofil kaila wa ana khairul munzileen

(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார்படுத்திக் கொடுத்து, (தம் சொந்த சகோதரர் புன்யாமீனின் சுகத்தை அவர்களிடம் தந்திரமாகப் பேசித் தெரிந்துகொண்டு "மறுமுறை நீங்கள் வந்தால்) தந்தை ஒன்றான உங்கள் சகோதர(ன் புன்யாமீ)னையும் அழைத்து வாருங்கள். (நீங்கள் குறைந்த கிரயம் கொடுத்தபோதிலும்) நிச்சயமாக நான் உங்களுக்கு(த் தானியங்களை) முழுமையாக அளந்து கொடுத்ததுடன், மிக்க மேலான விதத்தில் (உங்களுக்கு) விருந்து அளித்ததையும் நீங்கள் கவனிக்கவில்லையா?

Tafseer

فَإِن لَّمْ
நீங்கள் வரவில்லையெனில்/என்னிடம்
بِهِۦ
அவரைக் கொண்டு
فَلَا كَيْلَ
அறவேஇல்லை/ அளவை
لَكُمْ
உங்களுக்கு
عِندِى
என்னிடம்
وَلَا تَقْرَبُونِ
இன்னும் நெருங்காதீர்கள்/என்னை

Fa il lam taatoonee bihee falaa kaila lakum 'indee wa laa taqraboon

நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிடில் (என்னிடமுள்ள தானியத்தை) உங்களுக்கு அளந்து கொடுக்க முடியாது. நீங்கள் என்னை நெருங்கவும் முடியாது" என்று கூறினார்.

Tafseer