Skip to main content

فَلَمَّا سَمِعَتْ
அவள் செவியுற்றபோது
بِمَكْرِهِنَّ
அவர்களின் சூழ்ச்சியை
أَرْسَلَتْ
அனுப்பினாள்
إِلَيْهِنَّ
அவர்களிடம்
وَأَعْتَدَتْ
இன்னும் ஏற்பாடுசெய்தாள்
لَهُنَّ
அவர்களுக்கு
مُتَّكَـًٔا
ஒரு விருந்தை
وَءَاتَتْ
இன்னும் கொடுத்தாள்
كُلَّ وَٰحِدَةٍ
ஒவ்வொருவருக்கும்
مِّنْهُنَّ
அவர்களில்
سِكِّينًا
ஒரு கத்தியை
وَقَالَتِ
இன்னும் கூறினாள்
ٱخْرُجْ
வெளியேறுவீராக
عَلَيْهِنَّۖ
அவர்கள் முன்
فَلَمَّا
போது
رَأَيْنَهُۥٓ
பார்த்தனர்/அவரை
أَكْبَرْنَهُۥ
மிக உயர்வாக எண்ணினர்/அவரை
وَقَطَّعْنَ
இன்னும் அறுத்தனர்
أَيْدِيَهُنَّ
தங்கள் கைகளை
وَقُلْنَ
இன்னும் கூறினர்
حَٰشَ
பாதுகாப்பானாக
لِلَّهِ
அல்லாஹ்
مَا هَٰذَا
இல்லை /இவர்/மனிதராக
إِنْ هَٰذَآ
இல்லை/இவர்
إِلَّا
தவிர
مَلَكٌ
ஒரு வானவரே
كَرِيمٌ
கண்ணியமான

Falammaa sami'at bimak rihinna arsalat ilaihinna wa a'tadat lahunna muttaka anw wa aatat kulla waahidatim min hunna sikkeenanw wa qaala tikh ruj 'alaihinna falammaa ra aynahooo akbarnahoo wa qatta'na aydiyahunna wa qulna haasha lillaahi maa haaza basharaa; in haazaaa illaa malakun kareem

(அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து அங்கு வந்த ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தி(யும்) கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய்மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே அன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَتْ
கூறினாள்
فَذَٰلِكُنَّ
இவர்தான்
ٱلَّذِى
எவர்
لُمْتُنَّنِى
பழித்தீர்கள்/என்னை
فِيهِۖ
அவர் விஷயத்தில்
وَلَقَدْ
திட்டவட்டமாக
رَٰوَدتُّهُۥ
என் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரை
عَن نَّفْسِهِۦ
பலவந்தமாக
فَٱسْتَعْصَمَۖ
காத்துக்கொண்டார்
وَلَئِن لَّمْ
அவர் செய்யவில்லையெனில்
مَآ ءَامُرُهُۥ
எதை/ஏவுகிறேன்/அவருக்கு
لَيُسْجَنَنَّ
நிச்சயமாக சிறையிலிடப்படுவார்
وَلَيَكُونًا
இன்னும் நிச்சயமாக ஆகுவார்
مِّنَ ٱلصَّٰغِرِينَ
இழிவானவர்களில்

Qaalat fazaalikunnal lazee lumtunnanee feeh; wa laqad raawattuhoo 'an nafsihee fasta'sam; wa la'il lam yaf'al maaa aamuruhoo la yusjananna wa la yakoonam minas saaghireen

அதற்கவள் "நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர் இவர்தான். நிச்சயமாக நான் அவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், அவர் தப்பித்துக் கொண்டார். இனியும் அவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப்படுவார்" என்று கூறினாள்.

Tafseer

قَالَ
கூறினார்
رَبِّ
என் இறைவா
ٱلسِّجْنُ
சிறை
أَحَبُّ
மிக விருப்பமானது
إِلَىَّ مِمَّا
எனக்கு/எதை விட
يَدْعُونَنِىٓ
அழைக்கிறார்கள்/என்னை
إِلَيْهِۖ
அதன் பக்கம்
وَإِلَّا تَصْرِفْ
நீ திருப்பவில்லையெனில்
عَنِّى
என்னை விட்டு
كَيْدَهُنَّ
சூழ்ச்சியை/ அவர்களின்
أَصْبُ
இச்சைகொள்வேன்
إِلَيْهِنَّ
அவர்கள் பக்கம்
وَأَكُن
இன்னும் ஆகிவிடுவேன்
مِّنَ ٱلْجَٰهِلِينَ
அறிவீனர்களில்

Qaala rabbis sijnu ahabbu ilaiya mimma yad'oo naneee 'ilaihi wa illaa tasrif 'annee kaidahunna asbu ilaihinna wa akum minal jaahileen

அதற்கவர், "என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தைவிட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளாவிட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகி விடுவேன்" என்று பிரார்த்தித்தார்.

Tafseer

فَٱسْتَجَابَ
பதிலளித்தான்
لَهُۥ
அவருக்கு
رَبُّهُۥ
அவருடைய இறைவன்
فَصَرَفَ
ஆகவேதிருப்பினான்
عَنْهُ
அவரை விட்டு
كَيْدَهُنَّۚ
சூழ்ச்சியை அவர்களின்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
هُوَ
அவன்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Fastajaaba lahoo rabbuhoo fasarafa 'anhu kaidahunn; innahoo Huswas_Samee'ul 'Aleem

(அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.

Tafseer

ثُمَّ بَدَا
பிறகு/தோன்றியது/அவர்களுக்கு
مِّنۢ بَعْدِ
பின்னரும்
مَا رَأَوُا۟
அவர்கள் பார்த்த
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
لَيَسْجُنُنَّهُۥ
நிச்சயமாக அவர்கள் சிறையில் அடைக்கவேண்டும்/ அவரை
حَتَّىٰ حِينٍ
வரை/ஒரு காலம்

Summa badaa lahum mim ba'di maa ra-awul Aayaati layasjununnahoo hatta heen

(யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.)

Tafseer

وَدَخَلَ
நுழைந்தார்(கள்)
مَعَهُ
அவருடன்
ٱلسِّجْنَ
சிறையில்
فَتَيَانِۖ
இரு வாலிபர்கள்
قَالَ
கூறினான்
أَحَدُهُمَآ
அவ்விருவரில் ஒருவன்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَرَىٰنِىٓ
கனவு கண்டேன்/என்னை
أَعْصِرُ خَمْرًاۖ
பிழிகிறேன்/மதுவை
وَقَالَ
இன்னும் கூறினான்
ٱلْءَاخَرُ
மற்றவன்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَرَىٰنِىٓ
கனவு கண்டேன்/என்னை
أَحْمِلُ
சுமக்கிறேன்
فَوْقَ رَأْسِى
மேல்/என் தலை
خُبْزًا
ரொட்டியை
تَأْكُلُ
புசிப்பதாக
ٱلطَّيْرُ
பறவைகள்
مِنْهُۖ
அதிலிருந்து
نَبِّئْنَا
அறிவிப்பீராக/எங்களுக்கு
بِتَأْوِيلِهِۦٓۖ
இதன் விளக்கத்தை
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
نَرَىٰكَ
காண்கிறோம்/உம்மை
مِنَ ٱلْمُحْسِنِينَ
நல்லறம்புரிபவர்களில்

Wa dakhala ma'ahussijna fata yaan; qaala ahaduhumaaa inneee araaneee a'siru khamranw wa qaalal aakharu inneee khubzan taakulut tairu minh; nabbi 'naa bitaaweelihee innaa naraaka minal muhsineen

(அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) "நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன் "நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்" என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) "நிச்சயமாக நாங்கள் உங்களை மிக்க (ஞானமுடைய) நல்லோர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீங்கள் எங்களுக்கு அறிவிப்பீராக!" (என்று கூறினான்).

Tafseer

قَالَ
கூறினார்
لَا يَأْتِيكُمَا
வராது/உங்களிடம்
طَعَامٌ
ஓர் உணவு
تُرْزَقَانِهِۦٓ
உணவளிக் கப்படுகிறீர்கள்/அதை
إِلَّا نَبَّأْتُكُمَا
தவிர/அறிவித்தேன்/உங்கள் இருவருக்கும்
بِتَأْوِيلِهِۦ
அதன் விளக்கத்தை
قَبْلَ
முன்னர்
أَن يَأْتِيَكُمَاۚ
அது வருவதற்கு/உங்கள் இருவருக்கும்
ذَٰلِكُمَا
இது
مِمَّا
இருந்து/எவை
عَلَّمَنِى
கற்பித்தான்/எனக்கு
رَبِّىٓۚ
என் இறைவன்
إِنِّى
நிச்சயமாக நான்
تَرَكْتُ
விட்டுவிட்டேன்
مِلَّةَ
மார்க்கத்தை
قَوْمٍ
மக்களுடைய
لَّا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَهُم
இன்னும் அவர்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
هُمْ كَٰفِرُونَ
அவர்கள் நிராகரிக்கின்றார்கள்

Qaala laa yaateekumaa ta'aamun turzaqaaniheee illaa nabbaatukumaa bitaaweelihee qabla any yaatiyakumaa; zaali kumaa mimmaa 'allamanee rabbee; innee taraktu millata qawmil laa yu'minoona billaahi wahum bil aakhirati hum kaafiroon

(அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) "நீங்கள் புசிக்கக் கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவும் (இக்கனவுகளின் பலன்) உங்களிருவருக்கும் நிறைவேறுவதற்கு முன்னதாகவும் (அக்கனவுகளின்) பலனை நீங்கள் அடைவதற்கு முன்னதாகவும் (அதனை) நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதனை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமை யையும் நிராகரிக்கும் மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன்.

Tafseer

وَٱتَّبَعْتُ
இன்னும் பின்பற்றினேன்
مِلَّةَ
மார்க்கத்தை
ءَابَآءِىٓ
என் மூதாதைகளாகிய
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
وَيَعْقُوبَۚ
யஃகூப்
مَا كَانَ
தகுமானதல்ல
لَنَآ
எங்களுக்கு
أَن نُّشْرِكَ
நாங்கள் இணைவைப்பது
بِٱللَّهِ
அல்லாஹ்வின்
مِن شَىْءٍۚ
எதையும்
ذَٰلِكَ
இது
مِن
இருந்து
فَضْلِ
அருள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْنَا
எங்கள் மீது
وَعَلَى
இன்னும் மீது
ٱلنَّاسِ
மக்கள்
وَلَٰكِنَّ
எனினும்
أَكْثَرَ
அதிகமானவர்(கள்)
ٱلنَّاسِ
மக்களில்
لَا يَشْكُرُونَ
நன்றி செலுத்த மாட்டார்கள்

Wattab'tu millata aabaaa'eee Ibraaheema wa Ishaaqa wa Ya'qoob; maa kaana lanaaa an nushrika billaahi min shai' zaalikamin fadlil laahi 'alainaa wa 'alan naasi wa laakinna aksaran naasi laa yashkuroon

அன்றி, என்னுடைய மூதாதைகளாகிய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை.

Tafseer

يَٰصَىٰحِبَىِ
என் (இரு) தோழர்களே
ٱلسِّجْنِ
சிறை
ءَأَرْبَابٌ
?/தெய்வங்கள்
مُّتَفَرِّقُونَ
பிரிந்துள்ளவர்கள்
خَيْرٌ
மேலானவர்(கள்)
أَمِ
அல்லது
ٱللَّهُ ٱلْوَٰحِدُ
அல்லாஹ்/ஒருவன்
ٱلْقَهَّارُ
அடக்கி ஆளுபவன்

Yaa saahibayis sijni 'a-arbaabum mutafarriqoona khayrun amil laahul waahidul qahhaar

சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (யாதொருசக்தியுமற்ற) வெவ்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா?

Tafseer

مَا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குவதில்லை
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
إِلَّآ
தவிர
أَسْمَآءً
பெயர்களை
سَمَّيْتُمُوهَآ
சூட்டினீர்கள்/ அவற்றை
أَنتُمْ
நீங்களும்
وَءَابَآؤُكُم
இன்னும் மூதாதைகளும் உங்கள்
مَّآ أَنزَلَ
இறக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
بِهَا
இவற்றுக்கு
مِن
எவ்வித
سُلْطَٰنٍۚ
ஆதாரத்தை
إِنِ ٱلْحُكْمُ
இல்லை/அதிகாரம்
إِلَّا
தவிர
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே
أَمَرَ
கட்டளையிட்டான்
أَلَّا تَعْبُدُوٓا۟
நிச்சயமாக வணங்காதீர்கள்
إِلَّآ
தவிர
إِيَّاهُۚ
அவனை
ذَٰلِكَ
இது
ٱلدِّينُ
மார்க்கம்
ٱلْقَيِّمُ
நேரானது
وَلَٰكِنَّ
எனினும்
أَكْثَرَ
அதிகமானவர்(கள்)
ٱلنَّاسِ
மக்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Maa ta'budoona min doonihee illaaa asmaaa'an sam maitumoohaaa antum wa aabaaa'ukum maaa anzalal laahu bihaa min sultan; inilhukmu illaa lillaah; amara allaa ta'budooo illaaa iyyaah; zaalikad deenul qaiyimu wa laakinna aksaran naasi laa ya'lamoon

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக்கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே யன்றி (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக்கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கின்றான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ளவில்லை" (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,)

Tafseer