Skip to main content
bismillah

الٓرۚ
அலிஃப், லாம், றா
تِلْكَ ءَايَٰتُ
இவை/வசனங்கள்
ٱلْكِتَٰبِ
வேதம்
ٱلْمُبِينِ
தெளிவான(து)

Alif-Laaam-Raa; tilka Aayaatul Kitaabil Mubeen

அலிஃப்; லாம்; றா. இந்த அத்தியாயம் தெளிவான இவ்வேதத்தின் சில வசனங்களாகும்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
قُرْءَٰنًا
குர்ஆனாக
عَرَبِيًّا
அரபி
لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிவதற்காக

Innaaa anzalnaahu quraanan 'Arabiyyal la 'allakum ta'qiloon

(அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே (உங்களுடைய) அரபி மொழியில் இறக்கி வைத்தோம்.

Tafseer

نَحْنُ
நாம்
نَقُصُّ
விவரிக்கிறோம்
عَلَيْكَ
உமக்கு
أَحْسَنَ
மிக அழகானதை
ٱلْقَصَصِ
சரித்திரங்களில்
بِمَآ أَوْحَيْنَآ
வஹீ அறிவித்ததன் மூலம்
إِلَيْكَ
உமக்கு
هَٰذَا ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
وَإِن كُنتَ
நிச்சயமாக இருந்தீர்
مِن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
لَمِنَ ٱلْغَٰفِلِينَ
அறியாதவர்களில்

Nahnu naqussu 'alaika ahsanal qasasi bimaaa awhainaaa ilaika haazal quraana wa in kunta min qablihee laminal ghaafileen

(நபியே!) வஹீ மூலம் நாம் உங்களுக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உங்களுக்கு நாம் விவரிக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீங்கள் இதனை அறியாதவராகவே இருந்தீர்கள்.

Tafseer

إِذْ قَالَ
சமயம்/கூறினார்
يُوسُفُ
யூஸுஃப்
لِأَبِيهِ
தன் தந்தைக்கு
يَٰٓأَبَتِ
என் தந்தையே
إِنِّى
நிச்சயமாக நான்
رَأَيْتُ
கனவில் கண்டேன்
أَحَدَ عَشَرَ
பதினொரு
كَوْكَبًا
நட்சத்திரத்தை
وَٱلشَّمْسَ
இன்னும் சூரியன்
وَٱلْقَمَرَ
இன்னும் சந்திரன்
رَأَيْتُهُمْ
அவற்றை நான் கனவில் கண்டேன்
لِى
எனக்கு
سَٰجِدِينَ
சிரம் பணியக்கூடியவையாக

Iz qaala Yoosufu li abeehi yaaa abati innee ra aytu ahada 'ashara kawkabanw wash shamsa walqamara ra aytuhum lee saajideen

யூஸுஃப் (நபி, யஃகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி "என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்" என்று கூறிய சமயத்தில்,

Tafseer

قَالَ
கூறினார்
يَٰبُنَىَّ
என்னருமை மகனே
لَا تَقْصُصْ
விவரிக்காதே
رُءْيَاكَ
உன் கனவை
عَلَىٰٓ إِخْوَتِكَ
உன் சகோதரர்களிடம்
فَيَكِيدُوا۟
சூழ்ச்சி செய்வார்கள்
لَكَ
உனக்கு
كَيْدًاۖ
ஒரு சூழ்ச்சியை
إِنَّ ٱلشَّيْطَٰنَ
நிச்சயமாக ஷைத்தான்
لِلْإِنسَٰنِ
மனிதனுக்கு
عَدُوٌّ
எதிரி
مُّبِينٌ
பகிரங்கமான(வன்)

Qaala yaa bunaiya laa taqsus ru'yaaka 'alaaa ikhwatika fayakeedoo laka kaidaa; innash Shaitaana lil insaani 'aduwwum mubeen

(யஃகூப் நபி யூஸுஃபை நோக்கி) "என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக்கூடும்)" என்று கூறினார்.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறே
يَجْتَبِيكَ
தேர்ந்தெடுப்பான்/உன்னை
رَبُّكَ
உன் இறைவன்
وَيُعَلِّمُكَ
இன்னும் கற்பிப்பான்/ உனக்கு
مِن تَأْوِيلِ
விளக்கத்திலிருந்து
ٱلْأَحَادِيثِ
பேச்சுகளின்
وَيُتِمُّ
இன்னும் முழுமையாக்குவான்
نِعْمَتَهُۥ
அவன் தன் அருளை
عَلَيْكَ
உம்மீது
وَعَلَىٰٓ
இன்னும் மீது
ءَالِ
கிளையார்
يَعْقُوبَ
யஃகூபின்
كَمَآ
போன்று
أَتَمَّهَا عَلَىٰٓ
முழுமைப்படுத்தினான்/அதை/மீது
أَبَوَيْكَ
உன்இருபாட்டன்கள்
مِن قَبْلُ
முன்னர்
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
وَإِسْحَٰقَۚ
இன்னும் இஸ்ஹாக்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உன் இறைவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Wa kazaalika yajtabeeka rabbuka wa yu'allimuka min taaweelil ahaadeesi wa yutimmu ni'matahoo 'alaika wa 'alaaa Aali Ya'qooba kamaaa atammahaa 'alaaa abawaika min qablu Ibraaheema wa Ishaaq; inna Rabbaka 'Aleemun hakeem

தவிர, "(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஃகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகிய உங்களுடைய இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்" (என்றும் கூறினார்கள்).

Tafseer

لَّقَدْ
திட்டவட்டமாக
كَانَ
இருக்கின்றன
فِى يُوسُفَ
யூஸுஃபில்
وَإِخْوَتِهِۦٓ
இன்னும் அவரது சகோதரர்கள்
ءَايَٰتٌ
அத்தாட்சிகள்
لِّلسَّآئِلِينَ
வினவுகின்றவர்களுக்கு

Laqad kaana fee Yoosufa wa ikhwatiheee Aayaatul lissaaa'ileen

(நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

Tafseer

إِذْ قَالُوا۟
சமயம்/கூறினர்
لَيُوسُفُ
திட்டமாக யூஸுஃபு
وَأَخُوهُ
இன்னும் அவருடையசகோதரர்
أَحَبُّ
அதிகப் பிரியமுள்ளவர்(கள்)
إِلَىٰٓ أَبِينَا
நம் தந்தைக்கு
مِنَّا
நம்மைவிட
وَنَحْنُ
நாம்
عُصْبَةٌ
ஒரு கூட்டமாக
إِنَّ
நிச்சயமாக
أَبَانَا
நம் தந்தை
لَفِى ضَلَٰلٍ
தவறில்தான்
مُّبِينٍ
பகிரங்கமானது

Iz qaaloo la Yoosufu wa akhoohu ahabbu ilaaa Abeenaa minnaa wa nahnu 'usbah; inna abaanaa lafee dalaalim mubeen

(யஃகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்" என்றும்,

Tafseer

ٱقْتُلُوا۟
கொல்லுங்கள்
يُوسُفَ
யூஸுஃபை
أَوِ
அல்லது
ٱطْرَحُوهُ
எறியுங்கள்/அவரை
أَرْضًا
பூமியில்
يَخْلُ
தனியாகிவிடும்
لَكُمْ
உங்களுக்கு
وَجْهُ
முகம்
أَبِيكُمْ
உங்கள் தந்தையின்
وَتَكُونُوا۟
இன்னும் மாறிவிடுவீர்கள்
مِنۢ بَعْدِهِۦ
இதன் பின்னர்
قَوْمًا صَٰلِحِينَ
மக்களாக/நல்லவர்கள்

Uqtuloo Yoosufa awitra hoohu ardany yakhlu lakum wajhu abeekum wa takoonoo mim ba'dihee qawman saaliheen

ஆகவே, "யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்திவிடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மனிதர்களாகி விடுங்கள்" என்றும் கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
قَآئِلٌ
கூறுபவர்
مِّنْهُمْ
அவர்களில்
لَا تَقْتُلُوا۟
கொல்லாதீர்கள்
يُوسُفَ
யூஸுஃபை
وَأَلْقُوهُ
போடுங்கள் அவரை
فِى غَيَٰبَتِ
ஆழத்தில்
ٱلْجُبِّ
கிணற்றின்
يَلْتَقِطْهُ
எடுத்துக் கொள்வார்(கள்)/அவரை
بَعْضُ
சிலர்
ٱلسَّيَّارَةِ
வழிப்போக்கர்களில்
إِن كُنتُمْ
நீங்கள் செய்பவர்களாக இருந்தால்

Qaalaa qaaa'ilum minhum laa taqtuloo Yoosufa wa alqoohu fee ghayaabatil jubbi yaltaqithu badus sai yaarati in kuntum faa 'ileen

(அதற்கு) அவர்களில் ஒருவர், "யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்துவிடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து யூஸுஃப்
القرآن الكريم:يوسف
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Yusuf
ஸூரா:12
வசனம்:111
Total Words:1600
Total Characters:7166
Number of Rukūʿs:12
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:53
Starting from verse:1596