Wamra atuhoo qaaa'imatun fadahikat fabashsharnaahaa bi Ishaaqa wa minw waraaa'i Ishaaqa Ya'qoob
(அச்சமயம் அங்கு) நின்று கொண்டிருந்த அவருடைய (கிழ) மனைவி (லூத் நபியின் மக்கள் செய்யும் தீய காரியங்களைச் செவியுற்று) சிரித்தாள்; ஆனால், அதே சமயத்தில் அவளுக்கு "இஸ்ஹாக்" (என்னும் மகனைப்) பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின்னர் "யஃகூப்" (என்னும் பேரன் பிறக்கப் போவதைப்) பற்றியும் நற்செய்தி கூறச் செய்தோம்.
Qaalat yaa wailataaa 'aalidu wa ana 'ajoozunw wa haaza ba'lee shaikhan inna haazaa lashai'un 'ajeeb
அதற்கவள், "என்னுடைய துக்கமே! (மாதவிடாய் நின்று) நான் கிழவியாகவும், என்னுடைய இக்கணவர் ஒரு வயோதிகராகவும் ஆனதன் பின்னர் நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்!" என்றாள்.
Qaalooo ata'jabeena min amril laahi rahmatul laahi wa barakaatuho 'alaikum Ahlal Bayt; innahoo Hameedum Majeed
அதற்கவர்கள், "அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய பாக்கியங்களும் (இப்ராஹீமுடைய) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீதுள்ளன. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவனாகவும், மகிமை உடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்கள்.
Falammaa zahaba an Ibraaheemar raw'u wa jaaa'at hul bushraaa yujaadilunaa fee qawmi Loot
இப்ராஹீமுடைய திடுக்கம் நீங்கி அவருக்கு நற்செய்தி கிடைத்த பின்னர் "லூத்" தின் மக்களை (அழித்து விடுவதை)ப் பற்றி அவர் நம்மு(டைய மலக்குகளு)டன் தர்க்கம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
Inna Ibraaheema lahaleemun awwwaahum muneeb
நிச்சயமாக இப்ராஹீம் மிக்க சகிப்பவராகவும், மிக இளகியமன முடையவராகவும் (எதற்கும்) நம்மையே நோக்குபவராகவும்இருந்தார்.
Yaaa Ibraaheemu a'rid 'an haazaaa innahoo qad jaaa'a amru Rabbika wa innahum aateehim 'azaabun ghairun mardood
(ஆகவே, அத்தூதர்கள் இப்ராஹீமை நோக்கி) இப்ராஹீமே! நீங்கள் இதைப் (பற்றி தர்க்கம் செய்யாது) புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக (அவர்களை அழிப்பதற்காக) உங்கள் இறைவனுடைய கட்டளை பிறந்துவிட்டது. அன்றி, நிச்சயமாக அவர்களால் தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும் (என்று கூறினார்கள்.)
Wa lammaa jaaa'at Rusulunaa Lootan seee'a bihim wa daaqa bihim zar'anw wa qaala haazaa yawmun 'aseeb
(இப்ராஹீமிடமிருந்து) நம் தூதர்கள் லூத்திடம் வந்த பொழுது, அவர் (அம்மலக்குகளைத் தம் மக்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று) கவலைக்குள்ளாகி அவரது மனம் சுருங்கி "இது மிக நெருக்கடியான நாள்" என்று அவர் கூறினார்.
Wa jaaa'ahoo qawmuhoo yuhra'oona ilaihi wa min qablu kaanoo ya'maloonas saiyiaat; qaala yaa qawmi haaa'ulaaa'i banaatee hunna atharu lakum fattaqul laaha wa laa tukhzooni fee daifee alaisa minkum rajulur rasheed
(இதற்குள்) அவருடைய மக்கள் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய காரியங்களையே செய்து கொண்டிருந்தனர். (இதனை நாடியே அவரிடம் அவர்கள் வந்தனர்.) அதற்கு ("லூத்" நபி அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! இதோ! என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றனர். (அவர்களை திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள். (உங்களுக்கு நல்லுபதேசம் செய்யும்) நல்ல மனிதன் ஒருவன் கூட உங்களிடம் இல்லையா?" என்று கேட்டார்.
Qaaloo laqad 'alimta maa lanaa fee banastika min haqq, wa innaka lata'lamu maa nureed
அதற்கவர்கள் "உங்களுடைய பெண்மக்களிடம் எங்களுக்கு யாதொரு தேவையும் இல்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்கள்" என்றும் கூறினார்கள்.
Qaala law anna lee bikum quwwatan aw aaweee ilaa ruknin shadeed
அதற்கவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டாமா? அல்லது (உங்களைத் தடுத்து விடக்கூடிய) பலமான ஆதரவை நான் அடைய வேண்டாமா?" என்று (மிக துக்கத்துடன்) கூறினார்.