Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௫௯

قُلْ اَرَءَيْتُمْ مَّآ اَنْزَلَ اللّٰهُ لَكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ۗ قُلْ اٰۤللّٰهُ اَذِنَ لَكُمْ اَمْ عَلَى اللّٰهِ تَفْتَرُوْنَ  ( يونس: ٥٩ )

Say
قُلْ
கூறுவீராக
"Have you seen
أَرَءَيْتُم
அறிவிப்பீர்களாக
what (has been) sent down
مَّآ أَنزَلَ
எதை/இறக்கினான்
(by) Allah
ٱللَّهُ
அல்லாஹ்
for you
لَكُم
உங்களுக்காக
of (the) provision
مِّن رِّزْقٍ
உணவில்
and you have made
فَجَعَلْتُم
நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களா
of it
مِّنْهُ
அதில்
unlawful
حَرَامًا
ஆகாதவை
and lawful?"
وَحَلَٰلًا
இன்னும் ஆகுமானவை
Say
قُلْ
கூறுவீராக
"Has Allah
ءَآللَّهُ
அல்லாஹ்
permitted
أَذِنَ
அனுமதியளித்தான்
[to] you
لَكُمْۖ
உங்களுக்கு
or
أَمْ
அல்லது
against
عَلَى
மீது
Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
you invent (lies)?"
تَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறீர்கள்

Qul ara'aitum maaa anzalal laahu lakum mir rizqin faja'altum minhu haraamanw wa halaalan qul aaallaahu azina lakum am 'alal laahi taftaroon (al-Yūnus 10:59)

Abdul Hameed Baqavi:

(அன்றி, நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்களுக்காக அல்லாஹ் இறக்கிவைத்த உணவுகளை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஆகாதவையென்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் (உங்கள் விருப்பப்படி) நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களே! (இவ்வாறு உங்கள் விருப்பப்படி செய்ய) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றானா? அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக(ப் பொய்) கூறுகிறீர்களா?" (என்றும் நீங்கள் கேளுங்கள்.)

English Sahih:

Say, "Have you seen what Allah has sent down to you of provision of which you have made [some] lawful and [some] unlawful?" Say, "Has Allah permitted you [to do so], or do you invent [something] about Allah?" ([10] Yunus : 59)

1 Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”