Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௪௫

وَيَوْمَ يَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ يَلْبَثُوْٓا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ يَتَعَارَفُوْنَ بَيْنَهُمْۗ قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَاۤءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ   ( يونس: ٤٥ )

And the Day
وَيَوْمَ
நாளில்
He will gather them
يَحْشُرُهُمْ
ஒன்று சேர்ப்பான் அவர்களை
as if
كَأَن
போன்று
they had not remained they had not remained
لَّمْ يَلْبَثُوٓا۟
அவர்கள் தங்கவில்லை
except an hour
إِلَّا سَاعَةً
தவிர/ஒரு நேரம்
of the day
مِّنَ ٱلنَّهَارِ
பகலில்
they will recognize each other
يَتَعَارَفُونَ
அறிந்துகொள்வார்கள்
between them
بَيْنَهُمْۚ
தங்களுக்குள்
Certainly (will have) lost
قَدْ خَسِرَ
திட்டமாக நஷ்டமடைந்தார்(கள்)
those who
ٱلَّذِينَ
எவர்கள்
denied
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
the meeting
بِلِقَآءِ
சந்திப்பை
(with) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
and not they were
وَمَا كَانُوا۟
அவர்கள் இருக்கவில்லை
the guided ones
مُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களாக

Wa Yawma yahshuruhum ka al lam yalbasooo illaa saa'atam minan nahaari yata'aarafoona bainahum; qad khasiral lazeena kazzaboo biliqaaa'il laahi wa maa kaanoo muhtadeen (al-Yūnus 10:45)

Abdul Hameed Baqavi:

(விசாரணைக்காக) அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் ஒரு பகலில் சொற்ப நேரத்தைத் தவிர (இவ்வுலகில்) தாங்கள் தங்கவில்லை என்று அவர்கள் எண்ணுவதுடன், தங்களுக்குள் ஒருவரையொருவர் அறிந்தும் கொள்வார்கள். (ஆனால், ஒருவருக் கொருவர் உதவி செய்ய முன்வரார்.) அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யாக்கியவர்கள் நிச்சயமாக (அந்த நாளில்) நஷ்டமடைந்தே இருப்பார்கள். (அந்நஷ்டத்திலிருந்து மீள) வழி காணாதவர்களாகவும் இருப்பார்கள்.

English Sahih:

And on the Day when He will gather them, [it will be] as if they had not remained [in the world] but an hour of the day, [and] they will know each other. Those will have lost who denied the meeting with Allah and were not guided. ([10] Yunus : 45)

1 Jan Trust Foundation

அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்| அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.