Wa izaaa azaqnan naasa rahmatam mim ba'di darraaa'a massat hum izaa lahum makrun feee aayaatinaa; qulil laahu asra'u makraa; inna rusulanaa yaktuboona maa tamkuroon
(இம்)மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கி (பின்னர் நம்) அருளைக் கொண்டு அவர்கள் இன்பமடையும்படி நாம் செய்தால் (அதற்கு அவர்கள் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) உடனே அவர்கள் நம் வசனங்களில் (தவறான அர்த்தம் கற்பிக்க) சூழ்ச்சி செய்கின்றனர். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி "உங்கள் சூழ்ச்சியைவிட) அல்லாஹ்வின் சூழ்ச்சி முந்திக் கொள்ளும்!" என்று கூறுங்கள். நிச்சயமாக நம்முடைய தூதர்(களாகிய மலக்கு)கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
Huwal lazee yusaiyirukum fil barri walbahri hattaaa izaa kuntum fil fulki wa jaraina bihim bireeh in taiyibatinw wa farihoo bihaa jaaa'at haa reehun 'aasifunw wa jaaa'ahumul mawju min kulli makaaninw wa zannooo annahum uheeta bihim da'awul laaha mukhliseena lahud deena la'in anjaitanaa min haazihee lanakoonannna minash shaakireen
நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை அழைத்துச் செல்கிறான். நீங்கள் கப்பலில் ஏறிய பின்னர் கப்பலில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி "நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு யாதொரு வழியுமில்லை)" என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி "எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று கலப்பற்ற மனதினராக அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்) பிரார்த்திக்கிறார்கள்.
Falammaaa anjaahum izaa hum yabghoona fil ardi bighairil haqq; yaaa aiyuhannaasu innamaa bagh yukum 'alaaa anfusikum mataa'al hayaatid dunyaa summa ilainaa marji'ukum fanunabbi 'ukum bimaa kuntum ta'maloon
அவன் அவர்களை பாதுகாத்துக் கொண்டாலோ அவர்கள் (கரை சேர்ந்த) அச்சமயமே நியாயமின்றி பூமியில் அடாது செய்யத் தலைப்படுகின்றனர். மனிதர்களே! உங்களுடைய அடாத செயல்கள் உங்களுக்கே கேடாக முடியும். (அதனால்) இவ்வுலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவிக்கலாம். பின்னரோ நம்மிடம் நீங்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை எவை என்பதை அச்சமயம் நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.
Innamaa masalul hayaatid dunyaa kammaaa'in anzalnaahu minas sammaaa'i fakhtalata bihee nabaatul ardi mimmaa yaakulun naasu wal an'aam; hattaaa izaaa akhazatil ardu zukhrufahaa wazziyanat wa zanna ahluhaaa annahum qaadiroona 'alaihaaa ataahaaa amrunaa lailan aw nahaaran faja'alnaahaa haseedan ka allam taghna bil-ams; kazaalika nufassilul aayaati liqawminy yatafakkaroon
இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்: மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கிறது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக்கூடிய புற்பூண்டு ஆகியவைகளுடன் கலந்து (அடர்ந்த பயிராக வளர்ந்து, பூத்துக் காய்த்துக் கதிர் வாங்கி) பூமியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில், அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்து விட்டது; நாளைக்கு) அதனை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம், இரவிலோ பகலிலோ நம்முடைய கட்டளை(யினால் ஒரு ஆபத்து) வந்து அதனால் அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இருக்கவே யில்லையென்று எண்ணக் கூடியவாறு அவைகளை நாம் அழித்து விட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு நாம் நம்முடைய வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்.
Wallaahu yad'ooo ilaa daaris salaami wa yahdee mai yashaaa'u ilaa Siraatim Mustaqeem
(மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய வீட்டிற்கே அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டு நடக்கும்) அவன் விரும்புகின்றவர்களை அதற்குரிய நேரான வழியிலும் செலுத்துகிறான்.
Lillazeena ahsanul husnaa wa ziyaadahtunw wa laa yarhaqu wujoohahum qatarunw wa laa zillah; ulaaa'ika ashaabul jannnati hum feehaa khaalidoon
நன்மை செய்தவர்களுக்கு(க் கூலி) நன்மைதான். (அவர்கள் செய்ததை விட) அதிகமாகவும் கிடைக்கும். (அதனால் அவர்கள் மிக்க ஆனந்தம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.) அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்துகொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
Wallazeena kasabus saiyi aati jazaaa'u saiyi'atim bimislihaa wa tarhaquhum zillah; maa lahum minal laahi min 'aasimin ka annamaaa ughshiyat wujoohuhum qita 'am minal laili muzlimaa; ulaaa'ika Ashaabun Naari hum feeha khaalidoon
தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப்போன்ற தீமையே! அவர்களை நிந்தனையும் வந்தடையும். அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவருமில்லை. இருண்ட இரவின் ஒரு பாகம் வந்து சூழ்ந்து கொண்டதைப்போல் அவர்களுடைய முகங்கள் (கருப்பாகக்) காணப்படும். அவர்கள் நரகவாசிகள்தாம். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.
Wa yawma nahshuruhum jamee'an summa naqoolu lillazeena ashrakoo makaanakum antum wa shurakaaa'ukum; fazaiyalnaa bainahum wa qaala shurakaaa'uhum maa kuntum iyyaanaa ta'budoon
(விசாரணைக்காக) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களில் இணை வைத்து வணங்கியவர்களை நோக்கி "நீங்களும் நீங்கள் இணைவைத்து வணங்கிய தெய்வங்களும் சிறிது இங்கு தாமதியுங்கள்" என்று கூறி அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பை நீக்கி விடுவோம். அச்சமயம் அவர்களுடைய தெய்வங்கள் (என்று கற்பனையாக வணங்கி வந்த அவைகள்) அவர்களை நோக்கி "நீங்கள் எங்களை வணங்கவே இல்லை" என்றும்,
Fakafaa billaahi shaheedam bainanaa wa bainakum in kunnaa 'an 'ibaadatikum laghaafileen
(இதற்கு) "நமக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வே சாட்சியாக இருக்கின்றான்; நீங்கள் (எங்களை) வணங்கியதை நாங்கள் அறியவும் மாட்டோம்" என்றும் கூறும்.
Hunaalika tabloo kullu nafsim maaa aslafat; wa ruddoo ilal laahi mawlaahu mul haqqi wa dalla 'anhum maa kaanoo yaftaroon
அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்களுடைய உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.