Skip to main content

وَلَوْ يُعَجِّلُ
அவசரப்படுத்தினால்
ٱللَّهُ
அல்லாஹ்(வும்)
لِلنَّاسِ
மனிதர்களுக்கு
ٱلشَّرَّ
தீங்கை
ٱسْتِعْجَالَهُم
அவர்கள் அவசரப்படுவதுபோல்
بِٱلْخَيْرِ
நன்மையை
لَقُضِىَ
முடிக்கப்பட்டிருக்கும்
إِلَيْهِمْ
அவர்களுக்கு
أَجَلُهُمْۖ
தவணைக் காலம்/ அவர்களுடைய
فَنَذَرُ
ஆகவே விட்டுவிடுகிறோம்
ٱلَّذِينَ
எவர்கள்
لَا يَرْجُونَ
ஆதரவு வைக்க மாட்டார்கள்
لِقَآءَنَا
நம் சந்திப்பை
فِى طُغْيَٰنِهِمْ
வழிகேட்டில்/ அவர்களுடைய
يَعْمَهُونَ
கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக

Wa law yu'aijilul laahu linnaasish sharras ti'jaalahum bilkhairi laqudiya ilaihim ajaluhum fanazarul lazeena laa yarjoona liqaaa'anna fee tughyaanihim ya'mahoon

நன்மையை அடைய (மனிதர்கள்) அவசரப்படுவதைப் போல் அல்லாஹ்வும் (குற்றம் செய்த) மனிதர்களுக்குத் தீங்கிழைக்க அவசரப்பட்டால் (இதுவரையில்) நிச்சயமாக அவர்களுடைய காலம் முடிவு பெற்றேயிருக்கும். எனினும், (மறுமையில்) நம்மைச் சந்திக்க வேண்டியதிருக்கின்றது என்பதை (ஒரு சிறிதும்) நம்பாதவர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலேயே தட்டழிந்து கெட்டலையும்படி (இம்மையில் சிறிது காலம்) நாம் விட்டு வைக்கிறோம்.

Tafseer

وَإِذَا مَسَّ
தீண்டினால்
ٱلْإِنسَٰنَ
மனிதனை
ٱلضُّرُّ
துன்பம்
دَعَانَا
பிரார்த்திக்கிறான் நம்மிடம்
لِجَنۢبِهِۦٓ
அவன் தன் விலாவின் மீது
أَوْ
அல்லது
قَاعِدًا
உட்கார்ந்தவனாக
أَوْ
அல்லது
قَآئِمًا
நின்றவனாக
فَلَمَّا كَشَفْنَا
நாம் நீக்கிவிட்டபோது
عَنْهُ
அவனை விட்டு
ضُرَّهُۥ
அவனுடைய துன்பத்தை
مَرَّ
செல்கின்றான்
كَأَن لَّمْ
அவன் நம்மை அழைக்காதது போன்று
إِلَىٰ ضُرٍّ
துன்பத்திற்கு
مَّسَّهُۥۚ
தீண்டியது/அவனை
كَذَٰلِكَ
இவ்வாறு
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டன
لِلْمُسْرِفِينَ
வரம்பு மீறிகளுக்கு
مَا
எவை
كَانُوا۟
இருந்தனர்
يَعْمَلُونَ
செய்கின்றனர்

Wa izaa massal insaanad durru da'aanaa lijambiheee aw qaa'idan aw qaaa'iman falammaa kashafnaa 'anhu durrahoo marra ka al lam yad'unaaa ilaa durrim massah; kazaalika zuyyina lilmusrifeena maa kaanoo ya'maloon

மனிதனுக்கு யாதொரு தீங்கேற்பட்டால் (அதனை நீக்கும்படி) அவன் தன்னுடைய (படுத்த) படுக்கையிலும், (உட்கார்ந்த) இருப்பிலும், (நின்ற) நிலையிலும் நம்மிடமே பிரார்த்திக்கிறான். ஆனால், அவனுடைய துன்பத்தை நாம் நீக்கிவிட்டாலோ அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதவனைப் போல் (புறக்கணித்துச்) சென்றுவிடுகிறான். வரம்பு மீறும் (இவர்களுக்கு) இவர்கள் செய்யும் காரியங்கள் இவ்வாறு அழகாக்கப்பட்டு விட்டன.

Tafseer

وَلَقَدْ أَهْلَكْنَا
திட்டமாக அழித்துவிட்டோம்
ٱلْقُرُونَ
தலைமுறைகளை
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னிருந்த
لَمَّا ظَلَمُوا۟ۙ
அவர்கள் அநியாயம் செய்தபோது
وَجَآءَتْهُمْ
இன்னும் வந்தனர்/அவர்களிடம்
رُسُلُهُم
தூதர்கள்/ அவர்களுடைய
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளை கொண்டு
وَمَا كَانُوا۟
அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை
كَذَٰلِكَ
இவ்வாறே
نَجْزِى
நாம் கூலி கொடுப்போம்
ٱلْقَوْمَ
மக்களுக்கு
ٱلْمُجْرِمِينَ
குற்றம்புரிகின்றவர்கள்

Wa laqad ahlaknal quroona min qablikum lammaa zalamoo wa jaaa'at hum Rusuluhum bil baiyinaati wa maa kaanoo liyu'minoo; kazaalika najzil qawmal mujrimeen

(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பினரை அவர்கள் செய்துகொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக நிச்சயமாக நாம் அழித்துவிட்டோம். அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சி களையே கொண்டு வந்தனர். எனினும் (அவற்றை) அவர்கள் நம்பவேயில்லை. குற்றம் செய்யும் மற்ற மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடு(த்துத் தண்டி)ப்போம்.

Tafseer

ثُمَّ
பிறகு
جَعَلْنَٰكُمْ
ஆக்கினோம்/ உங்களை
خَلَٰٓئِفَ
பிரதிநிதிகளாக
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مِنۢ بَعْدِهِمْ
அவர்களுக்குப் பின்னர்
لِنَنظُرَ
நாம் கவனிப்பதற்காக
كَيْفَ
எப்படி
تَعْمَلُونَ
நீங்கள் செய்கிறீர்கள்

Summa ja'alnaakum khalaaa'ifa fil ardi mim ba'dihim linanzura kaifa ta'maloon

அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை (அவர்களுடைய) பூமிக்கு அதிபதிகளாக்கி, நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று கவனித்துக் கொண்டு வருகின்றோம்.

Tafseer

وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
عَلَيْهِمْ
இவர்கள் மீது
ءَايَاتُنَا
வசனங்கள்/நம்
بَيِّنَٰتٍۙ
தெளிவான(வை)
قَالَ
கூறுகின்றனர்
ٱلَّذِينَ لَا
எவர்கள்/ஆதரவு வைக்கமாட்டார்கள்
لِقَآءَنَا
நம் சந்திப்பை
ٱئْتِ
வாரீர்
بِقُرْءَانٍ
ஒரு குர்ஆனைக் கொண்டு
غَيْرِ هَٰذَآ
அல்லாத/இது
أَوْ
அல்லது
بَدِّلْهُۚ
மாற்றுவீராக/அதை
قُلْ
கூறுவீராக
مَا يَكُونُ
முடியாது/என்னால்
أَنْ أُبَدِّلَهُۥ
நான்மாற்றுவது/அதை
مِن تِلْقَآئِ
புறத்திலிருந்து
نَفْسِىٓۖ
என்
إِنْ أَتَّبِعُ
பின்பற்ற மாட்டேன்
إِلَّا
தவிர
مَا يُوحَىٰٓ
எது/வஹீ அறிவிக்கப்படுகிறது
إِلَىَّۖ
எனக்கு
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
إِنْ عَصَيْتُ
நான் மாறுசெய்தால்
رَبِّى
என் இறைவனுக்கு
عَذَابَ
வேதனையை
يَوْمٍ
நாளின்
عَظِيمٍ
மகத்தான

Wa izaa tutlaa 'alaihim aayaatunaa baiyinaatin qaalal lazeena laa yarjoona liqaaa'ana'ti bi Quraanin ghairi haazaaa aw baddilh; qul maa yakoonu leee an ubaddilahoo min tilqaaa'i nafsee in attabi'u illaa maa yoohaaa ilaiya inneee akhaafu in 'asaytu Rabbee 'azaaba Yawmin 'Azeeem

(முன்னர் அழிந்து விட்டவர்களின் இடத்தில் அமர்த்தப்பட்ட) இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உங்களை நோக்கி) "இது அல்லாத வேறொரு குர்ஆனை நீங்கள் கொண்டு வாருங்கள்; அல்லது (எங்கள் இஷ்டப்படி) இதனை மாற்றிவிடுங்கள்" என்று கூறுகின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி "உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதனை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவைகளை அன்றி, (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என்னுடைய இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

قُل
கூறுவீராக
لَّوْ شَآءَ
நாடியிருந்தால்
ٱللَّهُ مَا
அல்லாஹ்/நான் ஓதியிருக்கவும் மாட்டேன் /இதை
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَلَآ أَدْرَىٰكُم
இன்னும் அவன் அறிவித்திருக்கவும் மாட்டான்/உங்களுக்கு
بِهِۦۖ
இதை
فَقَدْ لَبِثْتُ
திட்டமாக வசித்துள்ளேன்
فِيكُمْ
உங்களுடன்
عُمُرًا
ஒரு (நீண்ட) காலம்
مِّن قَبْلِهِۦٓۚ
இதற்கு முன்னர்
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Qul law shaaa'al laahu maa talawtuhoo 'alaikum wa laaa adraakum bihee faqad labistu feekum 'umuram min qablih; afalaa ta'qiloon

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "(உங்களுக்கு நான் இதனை ஓதிக் காண்பிக்கக் கூடாதென்று) அல்லாஹ் எண்ணியிருந்தால், நான் இதனை உங்களுக்கு ஓதிக் காண்பித்திருக்கவும் மாட்டேன். அவன் உங்களுக்கு இதனை அறிவித்திருக்கவும் மாட்டான். நிச்சயமாக நான் இதற்கு முன்னரும் நீண்ட காலம் உங்களுடன் வசித்துள்ளேன் (அல்லவா? நான் பொய் சொல்பவன் அல்ல என்பதை நீங்கள் நன்கறிந்திருக்கிறீர்கள். இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள முடியாதா?

Tafseer

فَمَنْ
யார்?
أَظْلَمُ
பெரும் அநியாயக்காரன்
مِمَّنِ
எவனைவிட
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்வின்
كَذِبًا
பொய்யை
أَوْ
அல்லது
كَذَّبَ
பொய்ப்பித்தான்
بِـَٔايَٰتِهِۦٓۚ
அவனுடைய வசனங்களை
إِنَّهُۥ
நிச்சயமாக
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்(கள்)
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்

Faman azlamu mimmanif taraa 'alal laahi kaziban aw kazzaba bi Aayaatih; innahoo laa yuflihul mujrimoon

அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குபவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக (இத்தகைய) குற்றவாளிகள் வெற்றி அடையவே மாட்டார்கள்.

Tafseer

وَيَعْبُدُونَ
இன்னும் அவர்கள் வணங்குகிறார்கள்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
مَا لَا
எதை/தீங்கிழைக்காது
يَضُرُّهُمْ
எதை/தீங்கிழைக்காது தங்களுக்கு
وَلَا يَنفَعُهُمْ
இன்னும் பலனளிக்காது/தங்களுக்கு
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
هَٰٓؤُلَآءِ
இவை
شُفَعَٰٓؤُنَا
சிபாரிசாளர்கள் எங்கள்
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
قُلْ
கூறுவீராக
أَتُنَبِّـُٔونَ
அறிவிக்கிறீர்களா?
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
بِمَا
எதை
لَا يَعْلَمُ
அறிய மாட்டான்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَلَا فِى
இன்னும் பூமியில்
سُبْحَٰنَهُۥ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
وَتَعَٰلَىٰ
இன்னும் உயர்ந்து விட்டான்
عَمَّا
எவற்றைவிட்டு
يُشْرِكُونَ
இணைவைக்கிறார்கள்

Wa ya'budoona min doonil laahi maa laa yadurruhum wa laa yanfa'uhum wa yaqooloona haaa'ulaaa'i shufa'aaa 'unaa 'indal laah; qul atunabbi 'oonal laaha bima laa ya'lamu fis samaawaati wa laa fil ard; subhaanahoo wa Ta'aalaa 'ammaa yushrikoon

(இணை வைப்பவர்கள்) தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் "இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை" என்றும் கூறுகின்றனர். (ஆகவே, நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவை (உள்ளனவா? அவை)களை (இவைகள் மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணை வைப்பவைகளைவிட மிக உயர்ந்தவன்" என்று கூறுங்கள்.

Tafseer

وَمَا كَانَ
இருக்கவில்லை
ٱلنَّاسُ
மனிதர்கள்
إِلَّآ
தவிர
أُمَّةً
ஒரு சமுதாயமாக
وَٰحِدَةً
ஒரே
فَٱخْتَلَفُوا۟ۚ
பிறகு மாறுபட்டனர்
وَلَوْلَا
இருக்கவில்லையெனில்
كَلِمَةٌ
சொல்
سَبَقَتْ
முந்தியது
مِن رَّبِّكَ
உம் இறைவனின்
لَقُضِىَ
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
بَيْنَهُمْ
அவர்களுக்கிடையில் எவற்றில்
فِيمَا
அவற்றில்
فِيهِ
மாறுபடுகின்றனர்
يَخْتَلِفُونَ
Err

Wa maa kaanan naasu illaaa ummmatanw waahidatan fakh talafoo; wa law laa kalimatun sabaqat mir Rabbika laqudiya bainahum fee maa feehi yakhtalifoon

மனிதர்கள் அனைவரும் (ஆரம்பத்தில் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே வகுப்பினராக இருந்தனர். பின்னரே (தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பல வகுப்பினராகப்) பிரிந்து விட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில்தான் முழுமையாகக் கொடுக்கப்படும் என்று நபியே!) உங்களது இறைவனின் வாக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்கள் மாறுபாடு செய்து கொண்டிருந்த விஷயத்தில் அவர்களுடைய காரியம் (இதுவரையில்) முடிவு பெற்றே இருக்கும்!

Tafseer

وَيَقُولُونَ
இன்னும் அவர்கள் கூறுகின்றனர்
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?
عَلَيْهِ
அவர் மீது
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
مِّن
இருந்து
رَّبِّهِۦۖ
அவருடைய இறைவன்
فَقُلْ
ஆகவே, கூறுவீராக
إِنَّمَا
எல்லாம்
ٱلْغَيْبُ
மறைவானவை
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியன
فَٱنتَظِرُوٓا۟
ஆகவே எதிர் பார்த்திருங்கள்
إِنِّى
நிச்சயமாக நான்
مَعَكُم
உங்களுடன்
مِّنَ ٱلْمُنتَظِرِينَ
எதிர்பார்ப்பவர்களில்

W yaqooloona law laaa unzila 'alaihi aayatum mir Rabbihee faqul innamal ghaibu lillaahi fantaziroo innee ma'akum minal muntazireen

(தவிர "நாம் விரும்புகிறவாறு) ஏதாவது ஓர் அத்தாட்சி (இறைவனின் நபியாகிய) அவர் மீது அவருடைய இறைவனால் அருளப்பட வேண்டாமா?" என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(நீங்கள் விரும்புகிறவாறு அத்தாட்சியை இறக்கி வைக்காத காரணம் உங்களுக்கு மறைவானது.) மறைவான விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (ஆகவே, அதனை நீங்கள் அறிய விரும்பினால்) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் (உங்களுடைய விஷமக் கூற்றினால் உங்களுக்கு என்ன கேடு வருகின்றதென்பதை) உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்."

Tafseer