Qulin zuroo maazaa fissamaawaati wal ard; wa maa tughnil Aayaatu wannuzuru 'an qawmil laa yu'minoon
(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை (சிறிது) கவனித்துப் பாருங்கள்" எனக் கூறுங்கள். எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம்முடைய வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் யாதொரு பயனுமளிக்காது.
Fahal yantaziroona illaa misla ayyaamil lazeena khalaw min qablihim; qul fantazirooo innee ma'akum minal muntazireen
(நபியே!) அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போன்றதேயன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? (எனவே, அவர்களை நோக்கி "அத்தகைய கஷ்டகாலம்தான் உங்களுக்கும் வர இருக்கிறது.) ஆகவே, (அதனை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் (அது உங்களுக்கு வருவதை) உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்" என்று கூறுங்கள்.
Summma nunajjee Ruslanaa wallazeena aamanoo; kazaalika haqqan 'alainaa nunjil mu'mineen
(அவ்வாறு வேதனை வரும் காலத்தில்) நம்முடைய தூதர்களை பாதுகாத்துக் கொள்வோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம். (ஏனென்றால்,) நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்வது நம்மீது கடமையாகவே இருக்கிறது.
Qul yaaa ayyuhan naasu in kuntum fee shakkkim min deenee falaa a'budul lazeena ta'budoona min doonil laahi wa laakin a'budul laahal lazee yatawaffaakum wa umirtu an akoona minal mu'mineen
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! நீங்கள் என்னுடைய மார்க்கத்தில் சந்தேகம் கொண்டபோதிலும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கு பவைகளை நான் எக்காலத்திலும் வணங்கப்போவதில்லை. எனினும், உங்கள் அனைவருடைய உயிரையும் கைப்பற்றும் (சக்தி பெற்ற) அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே கட்டளையிடப் பட்டுள்ளேன்.
Wa an aqim wajhaka liddeeni Haneefanw wa laa takoonannna minal mushrikeen
(நபியே!) நேரான மார்க்கத்தின் பக்கமே உங்களுடைய முகத்தை தொடர்ந்து திருப்பி வைப்பீராக! இணைவைத்து வணங்கு பவர்களில் நீங்களும் ஒருவராகிவிட வேண்டாம்.
Wa laa tad'u min doonil laahi maa laa yanfa'uka wa laa yadurruka fa in fa'alta fa innaka izam minaz zaalimeen
ஆகவே, உங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அநியாயக்காரர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்.
Wa iny yamsaskal laahu bidurrin falaa kaashifa lahoo illaa Huwa wa iny yuridka bikhairin falaa raaadda lifadlih; yuseebu bihee man yashaaa'u min 'ibaadih; wa huwal Ghafoorur Raheem
அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதனை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடைய வனாகவும் இருக்கிறான்.
Qul yaaa aiyuhan naasu qad jaaa'akumul haqqu mir Rabbikum famanih tadaa fa innamaa yahtadee linafsihee wa man dalla fa innamaa yadillu 'alaihaa wa maaa ana 'alaikum biwakeel
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதனைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதனைப் பின்பற்றாது) வழிதப்பி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். அன்றி, நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்கத் தக்க அதிகாரம் பெற்றவனல்லன்.
Qattabi' maa yoohaaa ilaika wasbir hattaa yahkumal laah; wa Huwa khairul haakimeen
(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப் பட்டவைகளையே நீங்கள் பின்பற்றி வாருங்கள். அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் (எதிரிகளால் ஏற்படும் கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருங்கள். தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்.