Skip to main content

ءَآلْـَٰٔنَ
இப்போதுதானா?
وَقَدْ عَصَيْتَ
மாறு செய்துவிட்டாய்
قَبْلُ وَكُنتَ
முன்னரோ/ நீ இருந்தாய்
مِنَ ٱلْمُفْسِدِينَ
விஷமிகளில்

Aaal'aana wa qad 'asaita qablu wa kunta minal mufsideen

(அதற்கும் நாம் அவனை நோக்கி,) "இச்சமயம்தான் (நீ நம்பிக்கை கொள்கிறாய்!) சற்று முன் வரையில் நீ மாறு செய்துகொண்டு, விஷமிகளில் ஒரு (தலை)வனாகவே இருந்தாய்.

Tafseer

فَٱلْيَوْمَ نُنَجِّيكَ
இன்று/ நாம் உயரத்தில் வைப்போம் / உன்னை
بِبَدَنِكَ
உன் உடலை
لِتَكُونَ
நீ ஆகுவதற்காக
لِمَنْ
எவருக்கு
خَلْفَكَ
பின்னால்/உனக்கு
ءَايَةًۚ
ஓர் அத்தாட்சியாக
وَإِنَّ
நிச்சயமாக
كَثِيرًا
அதிகமானவர்
مِّنَ ٱلنَّاسِ
மக்களில்/விட்டு
ءَايَٰتِنَا
நம் அத்தாட்சிகளை
لَغَٰفِلُونَ
அலட்சியம் செய்பவர்கள்தான்

Falyawma nunajjeeka bibadanika litakoona liman khalfaka Aayah; wa inna kaseeram minan naasi 'an aayaatinaa laghaafiloon

எனினும், உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஒரு அத்தாட்சியாவதற்காக உன்னுடைய உடலை (அது அழியாமல்) நாம் இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம்" (என்று கூறினோம்.) எனினும், நிச்சயமாக மனிதர்களில் பலர் நம்முடைய (அத்தகைய) அத்தாட்சிகளைப் பற்றியும் பராமுகமாயிருக்கின்றனர்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
بَوَّأْنَا
அமைத்தோம்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு
مُبَوَّأَ
இடத்தை
صِدْقٍ
மிக நல்ல
وَرَزَقْنَٰهُم
இன்னும் வழங்கினோம்/அவர்களுக்கு
مِّنَ ٱلطَّيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
فَمَا ٱخْتَلَفُوا۟
அவர்கள் மாறுபடவில்லை
حَتَّىٰ
வரை
جَآءَهُمُ
வந்தது அவர்களிடம்
ٱلْعِلْمُۚ
ஞானம்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
يَقْضِى
தீர்ப்பளிப்பான்
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
فِيمَا
எதில்
كَانُوا۟
இருந்தனர்
فِيهِ
அதில்
يَخْتَلِفُونَ
மாறுபடுகின்றனர்

Wa laqad bawwaanaa Baneee Israaa'eela mubawwa-a sidqinw wa razaqnaahum minnat taiyibaati famakh talafoo hattaa jaaa'ahmul 'ilm; inna Rabbaka yaqdee bainahum Yawmal Qiyaamati feemaa kaanoo feehi yakhtalifoon

நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வாக்களித்த) மிக வசதியான இடத்தைத் தந்து, நல்ல உணவுகளையும் அவர்களுக்கு அளித்து வந்தோம். அன்றி, உண்மையான ஞானம் (என்னும் இவ்வேதம்) அவர்களிடம் வரும் வரையில் இதற்கவர்கள் மாறுபடவில்லை; (வந்ததன் பின்னரே இதனை நிராகரித்து மாறு செய்கின்றனர்.) எதற்கு அவர்கள் மாறு செய்கின்றனரோ (அதனைப் பற்றி) அவர்களுக்கு மறுமை நாளில் நிச்சயமாக (அதுதான் உண்மை என்று) உங்களது இறைவன் தீர்ப்பளிப்பான்.

Tafseer

فَإِن كُنتَ
நீர் இருந்தால்
فِى شَكٍّ
சந்தேகத்தில்
مِّمَّآ أَنزَلْنَآ
நாம் இறக்கியதில்
إِلَيْكَ
உமக்கு
فَسْـَٔلِ
கேட்பீராக
ٱلَّذِينَ
எவர்கள்
يَقْرَءُونَ
படிக்கின்றார்கள்
ٱلْكِتَٰبَ
வேதத்தை
مِن قَبْلِكَۚ
உமக்கு முன்னர்
لَقَدْ
வந்துவிட்டது
جَآءَكَ
வந்துவிட்டது உமக்கு
ٱلْحَقُّ
உண்மை
مِن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
فَلَا تَكُونَنَّ
ஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர்
مِنَ ٱلْمُمْتَرِينَ
சந்தேகப்படுபவர்களில்

Fa in kunta fee shakkim mimmaaa anzalnaaa ilaika fas'alil lazeena yaqra'oonal Kitaaba min qablik; laqad jaaa'akal haqqu mir Rabbika falaa takoonanna minal mumtareen

(நபியே!) நாம் உங்களுக்கு அருட்செய்திருக்கும் இதில் (சிறிதும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.) நீங்கள் சந்தேகித்தால் உங்களுக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களை ஓதுபவர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் இறைவனிட மிருந்தே உண்மை(யான இவ்வேதம்) உங்களிடம் வந்தது. ஆதலால், சந்தேகப்படுபவர்களில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்.

Tafseer

وَلَا تَكُونَنَّ
அறவே நீர் ஆகிவிடாதீர்
مِنَ ٱلَّذِينَ
இருந்து/எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَتَكُونَ
ஆகிவிடுவீர்
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்

Wa laa takoonanna minal lazeena kazzaboo bi Aayaatil laahi fatakoona minal khaasireen

அன்றி, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிய வர்களுடன் நீங்கள் சேர்ந்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நஷ்டமடைந்தவர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
حَقَّتْ
உறுதியாகி விட்டது
عَلَيْهِمْ
அவர்கள் மீது
كَلِمَتُ
வாக்கு
رَبِّكَ
உம் இறைவனின்
لَا يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Innal lazeena haqqat 'alaihim Kalimatu Rabbika laa yu'minoon

நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகளென) உங்கள் இறைவனுடைய வாக்கு (ஆகிய தீர்ப்பு) ஏற்பட்டு விட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

Tafseer

وَلَوْ جَآءَتْهُمْ
வந்தால்/அவர்களிடம்
كُلُّ
எல்லாம்
ءَايَةٍ
அத்தாட்சி
حَتَّىٰ
வரை
يَرَوُا۟
காண்பார்கள்
ٱلْعَذَابَ
வேதனை
ٱلْأَلِيمَ
துன்புறுத்தக்கூடியது

Wa law jaaa'at hum kullu Aayatin hattaa yarawul 'azaabal aleem

துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரையில், அத்தாட்சிகள் அனைத்தும் அவர்களிடம் வந்தாலும், (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.)

Tafseer

فَلَوْلَا كَانَتْ
இருக்கக்கூடாதா!
قَرْيَةٌ
ஓர் ஊர்
ءَامَنَتْ
நம்பிக்கைகொண்டது
فَنَفَعَهَآ
பலனளித்தது/ தங்களுக்கு
إِيمَٰنُهَآ
தங்கள் நம்பிக்கை
إِلَّا
எனினும்
قَوْمَ
சமுதாயம்
يُونُسَ
யூனுஸ்
لَمَّآ ءَامَنُوا۟
போது/நம்பிக்கை கொண்டார்கள்
كَشَفْنَا
நீக்கினோம்
عَنْهُمْ
அவர்களை விட்டு
عَذَابَ
வேதனையை
ٱلْخِزْىِ
இழிவு
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்வில்
ٱلدُّنْيَا
உலகம்
وَمَتَّعْنَٰهُمْ
இன்னும் சுகமளித்தோம்/அவர்களுக்கு
إِلَىٰ
வரை
حِينٍ
ஒரு காலம்

Falaw laa kaanat qaryatun aamanat fanafa'ahaaa eemaanuhaaa illaa qawma Yoonusa lammaaa aamanoo kashafnaa 'anhum 'azaabal khizyi fil hayaatid dunyaa wa matta'naahum ilaa heen

தங்களுடைய நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) "யூனுஸ்" உடைய மக்களைப் போல மற்றொரு ஊரார் இருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கவும் அவர்களை நாம் விட்டு வைத்தோம்.

Tafseer

وَلَوْ شَآءَ
நாடினால்
رَبُّكَ
உம் இறைவன்
لَءَامَنَ
நம்பிக்கை கொண்டிருப்பார்(கள்)
مَن فِى
பூமியிலுள்ளவர்கள்
كُلُّهُمْ
அவர்கள் எல்லோரும்
جَمِيعًاۚ
அனைவரும்
أَفَأَنتَ
நீர்?
تُكْرِهُ
நிர்ப்பந்திப்பீர்
ٱلنَّاسَ
மக்களை
حَتَّىٰ يَكُونُوا۟
அவர்கள் ஆகிவிடுவதற்கு
مُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Wa law shaaa'a Rabbuka la aamana man fil ardi kulluhum jamee'aa; afa anta tukrihun naasa hattaa yakoonoo mu'mineen

உங்கள் இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாகி விடுவார்கள். எனினும், மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியுமா?

Tafseer

وَمَا كَانَ
சாத்தியமாகாது
لِنَفْسٍ
ஓர் ஆத்மாவிற்கு
أَن تُؤْمِنَ
அது நம்பிக்கை கொள்வது
إِلَّا
தவிர
بِإِذْنِ
அனுமதி கொண்டு
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
وَيَجْعَلُ
இன்னும் ஆக்குகிறான்
ٱلرِّجْسَ
தண்டனையை
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
لَا يَعْقِلُونَ
சிந்தித்து புரிய மாட்டார்கள்

Wa maa kaana linafsin an tu'mina illaa bi iznil laah; wa yaj'alur rijsa 'alal lazeena laa ya'qiloon

எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் அருள் (நாட்டம்) இன்றி நம்பிக்கை கொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் விஷமத்தின் காரணமாகப்) பாவத்தின் தண்டனையை ஆக்கி விடுகிறான்.

Tafseer