Skip to main content
bismillah

الٓرۚ
அலிஃப்; லாம்; றா
تِلْكَ ءَايَٰتُ
இவை/வசனங்கள்
ٱلْكِتَٰبِ
வேதத்தின்
ٱلْحَكِيمِ
ஞானமிகுந்த(து)

Alif-Laaam-Raa; tilka Aayaatul Kitaabil Hakeem

அலிஃப்; லாம்; றா. இவை ஞானம் நிறைந்த இந்த வேதத்தின் வசனங்களாகும்.

Tafseer

أَكَانَ
இருக்கிறதா?
لِلنَّاسِ
மனிதர்களுக்கு
عَجَبًا
ஆச்சரியமாக
أَنْ أَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தது
إِلَىٰ رَجُلٍ
ஒரு மனிதருக்கு
مِّنْهُمْ
அவர்களில்
أَنْ أَنذِرِ
என்று/எச்சரிப்பீராக
ٱلنَّاسَ
மனிதர்களை
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
أَنَّ
நிச்சயமாக
لَهُمْ
அவர்களுக்கு
قَدَمَ صِدْقٍ
நற்கூலி
عِندَ
இடத்தில்
رَبِّهِمْۗ
தங்கள் இறைவன்
قَالَ
கூறினார்(கள்)
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
إِنَّ
நிச்சயமாக
هَٰذَا
இவர்
لَسَٰحِرٌ
சூனியக்காரர்தான்
مُّبِينٌ
தெளிவான

A kaana linnaasi 'aaban an awhainaaa ilaa rajulim minhum an anzirin naasa wa bashshiril lazeena aamanoo anna lahum qadama sidqin 'inda Rabbihim; qaalal kaafiroona inna haaza lasaahirum mubeen

(நபியே!) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் ஒருவருக்கு வஹீ மூலம் நாம் கட்டளையிடுவது இம்மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதா? (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தங்கள் இறைவனிடத்தில் பெரும் பதவி உண்டென்று நற்செய்தி கூறுங்கள். எனினும், (இவ்வாறு நீங்கள் கூறுவதைப் பற்றி) இந்நிராகரிப்பவர்கள் உங்களை சந்தேகமற்ற ஒரு சூனியக்காரர்தான் என்று கூறுகின்றனர்.

Tafseer

إِنَّ رَبَّكُمُ
நிச்சயமாகஉங்கள் இறைவன்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِى
எத்தகையவன்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியையும்
فِى سِتَّةِ
இல்/ஆறு
أَيَّامٍ
நாள்கள்
ثُمَّ
பிறகு
ٱسْتَوَىٰ
உயர்ந்து விட்டான்
عَلَى
மீது
ٱلْعَرْشِۖ
அர்ஷ்
يُدَبِّرُ
நிர்வகிக்கிறான்
ٱلْأَمْرَۖ
காரியத்தை
مَا مِن
அறவே இல்லை
شَفِيعٍ
பரிந்துரைப்பவர்
إِلَّا
தவிர
مِنۢ بَعْدِ
பின்னரே
إِذْنِهِۦۚ
அவனுடைய அனுமதிக்கு
ذَٰلِكُمُ
அந்த
ٱللَّهُ
அல்லாஹ்தான்
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
فَٱعْبُدُوهُۚ
ஆகவே வணங்குங்கள் அவனை
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?

Inna Rabbakumul laahul lazee khalaqas samaawaati wal arda fee sittati aiyaamin summas tawaa 'alal 'Arshi yudabbirul amra maa min shafee'in illaa mim ba'di iznih; zalikumul laahu Rabbukum fa'budooh; afalaa tazakkaroon

(மனிதர்களே!) உங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்து "அர்ஷின்" மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். (இவை சம்பந்தப்பட்ட) எல்லா காரியங்களையும் அவனே திட்டமிட்டு (நிர்வகித்து)ம் வருகின்றான். அவனுடைய அனுமதியின்றி (உங்களுக்காக அவனிடம்) பரிந்து பேசுபவர்களும் எவருமில்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்ப்பவன். ஆகவே, அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவைகளை) நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

Tafseer

إِلَيْهِ
அவனிடமே
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
جَمِيعًاۖ
அனைவரின்
وَعْدَ
வாக்குறுதி
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
حَقًّاۚ
உண்மையே
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
يَبْدَؤُا۟
ஆரம்பிக்கிறான்
ٱلْخَلْقَ
படைப்பை
ثُمَّ
பிறகு
يُعِيدُهُۥ
மீட்கிறான்/அதை
لِيَجْزِىَ
கூலி கொடுப்பதற்காக
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
بِٱلْقِسْطِۚ
நீதமாக
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
لَهُمْ
அவர்களுக்கு
شَرَابٌ
குடிபானம்
مِّنْ حَمِيمٍ
முற்றிலும் கொதித்தவற்றிலிருந்து
وَعَذَابٌ
இன்னும் வேதனையும்
أَلِيمٌۢ
துன்புறுத்தும்
بِمَا
எதன் காரணமாக
كَانُوا۟
இருந்தனர்
يَكْفُرُونَ
நிராகரிக்கின்றனர்

Ilaihi marji'ukum jamee 'anw wa'dal laahi haqqaa; innahoo yabda'ul khalqa summa yu'eeduhoo liyajziyal lazeena aamanoo wa 'amilus saalihaati bilqist; wallazeena kafaroo lahum sharaabum min hamee minw wa 'azaabun aleemum bimaa kaanoo yakfuroon

(அன்றி, இறந்த பின்னரும்) நீங்கள் அனைவரும் அவனிடமே செல்ல வேண்டியதிருக்கிறது. அல்லாஹ்வுடைய இவ்வாக்குறுதி உண்மையானதே! நிச்சயமாக அவன்தான் படைப்புகளை முதல் தடவையும் உற்பத்தி செய்கின்றான். (இறந்த பின் மறுமுறையும்) அவர்களை உயிர்ப்பித்து, அவர்களில் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக (நற்)கூலி கொடுக்கின்றான். (இதனை) எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு முடிவுறக்காய்ந்த (கொதிக்கும்) நீர்தான் (மறுமையில்) குடிக்கக் கிடைக்கும். அன்றி, (இதனை) நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.

Tafseer

هُوَ
அவனே
ٱلَّذِى
எத்தகையவன்
جَعَلَ
ஆக்கினான்
ٱلشَّمْسَ
சூரியனை
ضِيَآءً
ஒளியாக(வும்)
وَٱلْقَمَرَ
இன்னும் சந்திரனை
نُورًا
வெளிச்சமாக(வும்)
وَقَدَّرَهُۥ
இன்னும் நிர்ணயித்தான் அதை
مَنَازِلَ
தங்குமிடங்களில்
لِتَعْلَمُوا۟
நீங்கள் அறிவதற்காக
عَدَدَ
எண்ணிக்கையையும்
ٱلسِّنِينَ
ஆண்டுகளின்
وَٱلْحِسَابَۚ
இன்னும் கணக்கையும்
مَا خَلَقَ
படைக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
ذَٰلِكَ
இவற்றை
إِلَّا
தவிர
بِٱلْحَقِّۚ
உண்மையானதற்கே
يُفَصِّلُ
விவரிக்கின்றான்
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
لِقَوْمٍ
சமுதாயத்திற்கு
يَعْلَمُونَ
அறிகிறார்கள்

Huwal lazee ja'alash shamsa diyaaa'anw walqamara nooranw wa qaddarahoo manaaz zila lita'lamoo 'adadas sineena walhisaab; maa khalaqal laahu zaalika illa bilhaqq; yufassilul aayaati liqawminw ya'lamoon

அவனே சூரியனை ஒளியாகவும் (பிரகாசமாகவும்), சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவைகளுக்கு (மாறிமாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக(த் தன் ஆற்றலுக்குரிய) சான்றுகளை இவ்வாறு விவரிக்கிறான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
فِى ٱخْتِلَٰفِ
மாறுவதில்
ٱلَّيْلِ
இரவு
وَٱلنَّهَارِ
இன்னும் பகல்
وَمَا خَلَقَ
இன்னும் எது/படைத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
لَءَايَٰتٍ
(உ) அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَتَّقُونَ
அல்லாஹ்வை அஞ்சுகின்றனர்

Inna fikh tilaafil laili wannahaari wa maa khalaqal laahu fis samaawaati wal ardi la Aayaatil liqawminy yattaqoon

இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் இறையச்சமுடைய மக்களுக்கு (உணர்ச்சியூட்டும்) பல சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
لَا يَرْجُونَ
ஆதரவு வைக்க மாட்டார்கள்
لِقَآءَنَا
நம் சந்திப்பை
وَرَضُوا۟
இன்னும் விரும்பினர்
بِٱلْحَيَوٰةِ
வாழ்க்கையை
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
وَٱطْمَأَنُّوا۟
இன்னும் நிம்மதியடைந்தனர்
بِهَا
அதைக் கொண்டு
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
هُمْ
அவர்கள்
عَنْ
விட்டு
ءَايَٰتِنَا
நம் வசனங்கள்
غَٰفِلُونَ
அலட்சியமானவர் களாக

Innal lazeena laa yarjoona liqaaa'anaa wa radoo bilhayaatid dunyaa watma annoo bihaa wallazeena hum 'an Aayaatinaa ghaafiloon

நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திக்க வேண்டியதிருக்கின்றது என்பதை (ஒரு சிறிதும்) நம்பாது இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதனைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கி) விட்டார்களோ அவர்களும், இன்னும் எவர்கள் நம் வசனங்களை (புறக்கணித்து) விட்டுப் பராமுகமாக இருக்கின்றனரோ அவர்களும், (ஆகிய)

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
مَأْوَىٰهُمُ
அவர்களுடைய தங்குமிடம்
ٱلنَّارُ
நரகம்தான்
بِمَا
எதன் காரணமாக
كَانُوا۟
இருந்தனர்
يَكْسِبُونَ
செய்கிறார்கள்

Ulaaa'ika maawaahumun Naaru bimaa kaanoo yaksiboon

இத்தகையவர்கள், இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) வைகளின் காரணமாக இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
يَهْدِيهِمْ
நேர்வழி செலுத்துவான்/அவர்களை
رَبُّهُم
இறைவன்/அவர்களுடைய
بِإِيمَٰنِهِمْۖ
அவர்களின் நம்பிக்கையின் காரணமாக
تَجْرِى
ஓடுகின்ற
مِن تَحْتِهِمُ
அவர்களுக்குக் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
فِى جَنَّٰتِ
சொர்க்கங்களில்
ٱلنَّعِيمِ
இன்பமிகு

Innal lazeena aamanoo wa 'amilus saalihaati yahdeehim Rabbuhum bi eemaanihim tajree min tahtihimul anhaaru fee jannaatin Na'eem

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மிக்க இன்பம் தரும் சுவனபதிகளுக்குரிய வழியில் செலுத்துகின்றான்.

Tafseer

دَعْوَىٰهُمْ فِيهَا
அவர்களின் பிரார்த்தனை/அதில்
سُبْحَٰنَكَ
நீ மிகப் பரிசுத்தமானவன்
ٱللَّهُمَّ
அல்லாஹ்வே
وَتَحِيَّتُهُمْ
இன்னும் அவர்களின் முகமன்
فِيهَا
அதில்
سَلَٰمٌۚ
ஸலாம்
وَءَاخِرُ
இறுதி
دَعْوَىٰهُمْ
பிரார்த்தனையின்/அவர்களுடைய
أَنِ ٱلْحَمْدُ
நிச்சயமாக புகழ்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
رَبِّ
இறைவன்
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Da'waahum feehaa Subbaanakal laahumma wa tahiyyatuhum feehaa salaam; wa aakhiru da'waahum anil hamdu lillaahi Rabbil 'aalameen

அதில் அவர்கள் (நுழைந்ததும்) "எங்கள் இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன்; (நீ மிகப் பரிசுத்தமானவன்)" என்று கூறுவார்கள். அதில் (தங்கள் தோழர்களைச் சந்திக்கும்போதெல்லாம்) "ஸலாமுன் (அலைக்கும்)" என்று முகமன் கூறுவார்கள். முடிவில் "புகழனைத்தும் உலகம் அனைத்தையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்துபவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமானது" என்று புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து யூனுஸ்
القرآن الكريم:يونس
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Yunus
ஸூரா:10
வசனம்:109
Total Words:1832
Total Characters:9990
Number of Rukūʿs:11
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:51
Starting from verse:1364